Showing posts with label Gajala. Show all posts
Showing posts with label Gajala. Show all posts

Wednesday, April 25, 2012

ராமன் தேடிய சீதை - இப்பவே இப்பவே


படம் : ராமன் தேடிய சீதை (2008)
இசை : வித்யா சாகர்
பாடியவர் : மது பாலகிருஷ்ணன், ஹரிணி










ம்….ம்…..ம்….ம்…..
ம்….ம்…..ம்….ம்…..


இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே


ம்….ம்…..ம்….ம்…..


இப்பவே இப்பவே பேசணும் இப்பவே


ம்….ம்…..ம்….ம்…..


கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே


இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே


இப்பவே இப்பவே பேசணும் இப்பவே……….


வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
உள்ளச்சேதம் வந்து விட்டால் என்ன செய்வது


முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான்


உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்


சொல்லித் தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட‌…


மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட‌…..


உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்
என்னைக் காண உன்னை நானும்


இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே….
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே…..


எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்


நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்…
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்


உன்னைக் காண நானும் வந்தால்
சாலை எல்லாம் பூஞ்சோலை….


உன்னை நீங்கி போகும் நேரம்
சோலை கூட தார்ப்பாலை…


மண்ணுக்குள்ளே வேரைப் போலே
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்


இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே


இப்பவே இப்பவே பேசணும் இப்பவே


கண்ணுக்குள்ள‌ உன்னைக் கண்ட அப்பவே அப்பவே


கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே


ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

Tuesday, August 23, 2011

ராம் - விடிகின்ற பொழுது


படம் : ராம் (2005)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : மதுமிதா
பாடல் வரிகள் : சினேகன்







விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா 

உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொட போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சு
மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சு
தீயில் என்னை நிக்க வச்சு சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே

காட்டு தீ போல கண்மூடி தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா
யாரிடம் உந்தன் கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்
பச்சை நிலம் பாலைவனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா
உன்னை விட கல்லரையே பக்கமடா


விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

Popular Posts