Showing posts with label Nishanthi. Show all posts
Showing posts with label Nishanthi. Show all posts

Saturday, February 9, 2013

Enga Ooru Pattukaran - Madura Marikolunthu

படம்: எங்க ஊரு பாட்டுக்காரன் (1987)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, K.S.சித்ரா
பாடல்வரிகள் : கங்கைஅமரன்

Image result for Enga Ooru Pattukaran




பச்சரிசி மாவிடிச்சி... 
மாவிடிச்சி மாவிடிச்சி
சக்கரையில் பாவு வச்சு... 
பாவு வச்சு பாவு வச்சு
சுக்குடிச்சி மிளகிடிச்சி... 
மிளகிடிச்சி மிளகிடிச்சி
பக்குவமா கலந்துவச்சி... 
கலந்துவச்சி கலந்துவச்சி
அம்மனுக்கு மா விளக்கு... 
எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்
அம்மன் அவ எங்களையும்... 
காக்க வேணும் காக்க வேணும் தாயி

மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்
மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டு பேசும்
இது மறையாத என்னுடைய பாசம்
மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்


பொட்டுன்னா பொட்டு வச்சு 
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுன்னு சேலையை கட்டி 
எட்டு வச்சு நடந்துகிட்டு
பொட்டுன்னா பொட்டு வச்சு 
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுன்னு சேலையை கட்டி 
எட்டு வச்சு நடந்துகிட்டு
கட்டுன்னா கட்டிப்புட்ட 
நெஞ்ச கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ண வச்சு 
என்ன கட்டி போட்டுப்புட்ட

கட்டுறது உனக்கு மட்டும் தானா
இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்ட குறை மாமா
அது இரு உசுர கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதென்ன
பாட்டு ஒண்ண அவுத்து விடு
மதுர...

மரிக்கொழுந்து வாசம்

என் ராசாவே உன்னுடைய நேசம்

அடி மதுர மரிக்கொழுன்து வாசம்

என் ராசாவே உன்னுடைய நேசம்


ம்ம்... ம்ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்ம்...
தந்த நன ந... தந்த நன ந...
தந்த நன ந... தந்த நன ந...

மெட்டுன்னா மெட்டு கட்டி 
இட்டு கட்டி பாடிகிட்டு
கட்டுன்னா ராகம் என்னும் 
மாலை ஒண்ண கட்டிப்புட்டு
மெட்டுன்னா மெட்டு கட்டி 
இட்டு கட்டி பாடிகிட்டு
கட்டுன்னா ராகம் என்னும் 
மாலை ஒண்ண கட்டிப்புட்டு
சுத்துன்னா சுத்தி அதை 
என் கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட 
தாலி கட்ட மறந்துபுட்ட

நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழெழு ஜென்மம் உன்னை பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ கெறங்குதடி
செறகடிச்சு பறக்குதடி
மதுர...

மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னுடைய நேசம்

மானோட பார்வை மீனோட சேரும்

மானோட பார்வை மீனோட சேரும்

மாறாம என்னைத் தொட்டு பேசும்

இது மறையாத என்னுடைய பாசம்

மதுர மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னுடைய நேசம்

மதுர மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னுடைய நேசம்


Tuesday, August 10, 2010

Enga Ooru Pattukaran - Shenbagame Shenbagame

படம் :எங்க ஊரு பாட்டுக்காரன் (1987)
இசை : இளையராஜா
பாடியவர்: மனோ
பாடல்வரிகள் : கங்கைஅமரன்

Image result for Enga Ooru Pattukaran    




பட்டுப் பட்டு பூச்சி போல
எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனச
வாசம் வரும் மல்லிகையும்
தொட்டுத் தொட்டு நான் கறக்க
துடிக்குதந்த செண்பகமும்

செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே


உன் பாதம் போகும் பாதை 
நானும் போக வந்தேனே
உன் மேல ஆசப்பட்டு
பாத்து காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேல ஆசப்பட்டு
பாத்து காத்து நின்னேனே

உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்னை பின்னாலே
எப்போதும் 
உன் தொட்டு
பாடப்போறேன் தன்னாலே

செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே


மூணாம்பிறையைப் போல 

காணும் நெற்றிப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் 

இந்தப் பாட்டோட
மூணாம்பிறையைப் போல
காணும் நெற்றிப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட


கருத்தது மேகம் தலை முடி தானோ
இழுத்தது என்ன பூவிழி தானோ
எள்ளுக்கும் ராசி பத்தி 

பேசிப் பேசி தீராது
உன்பாட்டுக்காரன் பாட்டு 
உன்ன விட்டுப் போகாது

செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே


Popular Posts