Showing posts with label Nagarjuna. Show all posts
Showing posts with label Nagarjuna. Show all posts

Friday, April 5, 2013

ரட்சகன் - போகும் வழி

படம்: ரட்சகன் (1997)
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: K.S.சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து






போகும் வழி எல்லாம் காத்தே 
என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்
கண் இரண்டும் இமைக்காமல் பார்த்தேன் 
என் கண்ணோடு கண்ணீரை விதைத்தாய்

கை ஏந்தி காதல் வரம் கேட்டேன் 
என் கைகளுக்கு பரிசு இது தானோ

உன்னை விட்டு விட முடியாமல் 
இந்த உலகை விடுகின்றேன்...

உன்னை விட்டு விட முடியாமல் 
இந்த உலகை விடுகின்றேன்...




Thursday, February 7, 2013

இதயத்தை திருடாதே - ஓ ப்ரியா ப்ரியா

படம் : இதயத்தை திருடாதே (1989)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மனோ, சித்ரா
பாடல் வரிகள் : வாலி




ஆ ஆ ஆ..... ஆ ஆ ஆ....
ஆ ஆ ஆ..... ஆ ஆ ஆ....
ம்... ம்.... ம்.... ம்....

ஓ ப்ரியா ப்ரியா... என் ப்ரியா ப்ரியா...
ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நானோர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது

ஓ ப்ரியா ப்ரியா... உன் ப்ரியா ப்ரியா...
ஓ ப்ரியா ப்ரியா... உன் ப்ரியா ப்ரியா...
இணைந்திடாது போவதோ
வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி


அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ

ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ

எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையம்

எறித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ

கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா

ஓ ப்ரியா ப்ரியா... என் ப்ரியா ப்ரியா...

ஓ ப்ரியா ப்ரியா... உன் ப்ரியா ப்ரியா...


காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராச லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே

ஷாஜஹானின் காதலி தாஜ்மஹல் பூங்கிளி
பாசம் வைத்த பாவம் தான் சாவும் வந்தது

இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே

அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே

விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இங்கு வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா

ஓ ப்ரியா ப்ரியா... என் ப்ரியா ப்ரியா...

ஓ ப்ரியா ப்ரியா... உன் ப்ரியா ப்ரியா...

ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி

நெஞ்சிரண்டு நாளும் பாட
காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்

Saturday, September 3, 2011

ரட்சகன் - நெஞ்சே நெஞ்சே

படம் : ரட்சகன் (1997)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  
K.J.ஜேசுதாஸ், சாதனாசர்கம்
பாடல் வரி : வைரமுத்து








நெஞ்சே நெஞ்சே மறந்து விடு
நினவினை கடந்து விடு
நெஞ்சே நெஞ்சே உறங்கி விடு
நிஜங்களை துறந்து விடு
கண்களை விற்றுத்தான் ஒவியமா
வெந்நீரில் மீன்கள் தூங்குமா
கண்ணீரில் காதல் வாழுமா
நெஞ்சே நெஞ்சே மறந்து விடு
நினவினை கடந்து விடு
நெஞ்சே நெஞ்சே உறங்கி விடு
நிஜங்களை துறந்து விடு


பெண்ணே பெண்ணே உன் வளையல்
எனக்கொரு விளங்கல்லவோ
காற்றுக்கு சிறை என்னவோ
தன்மானத்தின் தலையை விற்று
காதலின் வாழ் வாங்கவோ
கண் மூடி நான் வாழவோ
உன்னை எண்ணி முள் விரித்து
படுக்கவும் பழகிக் கொண்டேன்
என் மேல் யாரும் கல் எறிந்தால்
சிரிக்கவும் பழகிக் கொண்டேன்
உள்ளத்தை மறைத்தேன்
உயிர் வலி பொறுத்தேன் என்
சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்


நெஞ்சே நெஞ்சே நெருங்கி விடு
நிகழ்ந்ததை மறந்து விடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்து விடு
நிஜங்களில் கலந்து விடு
கட்டி வைத்த காற்றே வந்து விடு
கைகள் ரெண்டை ஏந்தினேன்
காதல் பிச்சை கேட்கிறேன்... ஹ
நெஞ்சே... நெஞ்சே..
நெஞ்சே... நெஞ்சே...
நெஞ்சே... நெஞ்சே...

அன்பே அன்பே நீ பிரிந்தால்
கண்களில் மழை வருமே
காற்று எனை கை விடுமே
விதை அழிந்து செடி வருமே
சிற்பிகள் உடைத்த பின்னே
முத்துக்கள் கை வருமே
காதல் ராஜா ஒன்றை கொடுத்தால்
இன்னொன்றில் உயிர் வருமே
உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
காதலில் சுகம் வருமே
அஸ்தமனம் எல்லாம் நிரந்தரமல்ல
மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்


நெஞ்சே... நெஞ்சே..
நெஞ்சே... நெஞ்சே...
நெஞ்சே... நெஞ்சே...

Thursday, June 30, 2011

எல்லாமே என் காதலி - உயிரே உயிரே



படம் : எல்லாமே என் காதலி (1995)
இசை : M.M.கீரவாணி

பாடியவர் :  
மனோ, சித்ரா
பாடல் வரி: பிறைசூடன்











உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ
உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ
உலகினில் நாளும் காணாத ஈடு இல்லாத
தெய்வ பந்தம் இதுவோ
கதிரோளி மாறி போனாலும் மாறி போகாத
உண்மை சொந்தம் இதுவோ
அந்த தெய்வீக பந்ததில் உண்டான உறவிது
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ
உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ


மனதினில் ஒ.. ஒ.. ஒ.. தீபமாக வந்த பொன் மானே 
விழிகளும்  ஒ.. ஒ.. ஒ.. தெய்வமாக காணும் பூந்தேனே 
உயிர் மொழி நீயடி உனகென்ன நானடி 
உயிர் போனாலும் போகாது நம் அன்பு சாட்சிகள் 
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ 


அன்பிலே வாழுதிங்கே இன்ப பேராலயம் 
மண்ணகம் போற்றும் இந்த உயிர்கள் சரணாலயம் 
வானமே மாறினும் காலமே தேயினும் 
மனம் தான் தீண்டும் உயிர் காதல் மறையாது அழியாது 


உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ


உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ 


உலகினில் நாளும் காணாத ஈடு இல்லாத 
தெய்வ பந்தம் இதுவோ 


கதிரோளி மாறி போனாலும் மாறி போகாத 
உண்மை சொந்தம் இதுவோ 


அந்த தெய்வீக பந்ததில் உண்டான உறவிது 
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ 

Wednesday, December 29, 2010

ரட்சகன் - கையில் மிதக்கும்



படம் : ரட்சகன் (1997)
இசை : A.R. ரஹ்மான்

பாடியவர் :  
ஸ்ரீனிவாஸ்
பாடல் வரி : வாலி




கனவா... இல்லை காற்றா...
கனவா... நீ.. காற்றா...

கையில் மிதக்கும் கனவா நீ 
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ

இப்படி உன்னை ஏந்தி கொண்டே
இந்திரலோகம் போய் விடவா 
இடையில் கொஞ்சம் வலியெடுத்தாலும்
சந்திர தரையில் பாயிடவா

கையில் மிதக்கும் கனவா நீ 
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ 

நிலவில் பொருள்கள் எடை இழக்கும் 
நீரிலும் பொருள் எடை இழக்கும் 
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி...
அதை கண்டு கொண்டேனடி...

ம் .. நிலவில் பொருள்கள் எடை இழக்கும் 
நீரிலும் பொருள் எடை இழக்கும் 
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி...
அதை கண்டு கொண்டேனடி...

காதல் தாய்மை இரண்டு மட்டும் 
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால் 
பசியோ வலியோ தெரியாது

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால் 
பசியோ வலியோ தெரியாது

உன்னை மட்டும் சுமந்து நடந்தால் 
உயரம் தூரம் தெரியாது

உன்னை மட்டும் சுமந்து நடந்தால் 
உயரம் தூரம் தெரியாது
உன் மேல் வந்தோரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது

கையில் மிதக்கும் கனவா நீ 
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ

கையில் மிதக்கும் கனவா நீ 
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ


கனவா... நீ.. காற்றா... 
கனவா... நீ.. காற்றா... 

Popular Posts