Showing posts with label Girija. Show all posts
Showing posts with label Girija. Show all posts

Thursday, February 7, 2013

இதயத்தை திருடாதே - ஓ ப்ரியா ப்ரியா

படம் : இதயத்தை திருடாதே (1989)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மனோ, சித்ரா
பாடல் வரிகள் : வாலி




ஆ ஆ ஆ..... ஆ ஆ ஆ....
ஆ ஆ ஆ..... ஆ ஆ ஆ....
ம்... ம்.... ம்.... ம்....

ஓ ப்ரியா ப்ரியா... என் ப்ரியா ப்ரியா...
ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நானோர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது

ஓ ப்ரியா ப்ரியா... உன் ப்ரியா ப்ரியா...
ஓ ப்ரியா ப்ரியா... உன் ப்ரியா ப்ரியா...
இணைந்திடாது போவதோ
வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி


அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ

ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ

எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையம்

எறித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ

கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா

ஓ ப்ரியா ப்ரியா... என் ப்ரியா ப்ரியா...

ஓ ப்ரியா ப்ரியா... உன் ப்ரியா ப்ரியா...


காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராச லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே

ஷாஜஹானின் காதலி தாஜ்மஹல் பூங்கிளி
பாசம் வைத்த பாவம் தான் சாவும் வந்தது

இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே

அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே

விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இங்கு வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா

ஓ ப்ரியா ப்ரியா... என் ப்ரியா ப்ரியா...

ஓ ப்ரியா ப்ரியா... உன் ப்ரியா ப்ரியா...

ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி

நெஞ்சிரண்டு நாளும் பாட
காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்

Wednesday, December 8, 2010

இதயத்தை திருடாதே - ஓம் நமஹ



படம் : இதயத்தை திருடாதே (1989)
இசை : இளையராஜா

பாடியவர் : மனோ, S.ஜானகி
பாடல் வரி : வாலி






Song Download


ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ 
உயிரின் உணர்வுக்கு ஓம்

ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ 
உறவின் உதவிக்கு ஓம்

வான் வழங்கும் அமுத கலசம் 
வாய் வழியே ததும்பி ததும்பி வழியிதோ... ஓ...

தேன் பொங்கும் தெய்வ வடிவம் 
தோள் தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ


மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா

நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா

ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா

ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா

நூலாடை விலகி விலகி நீரோடை பெருகி வழியும் வேளை

முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்


செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது

ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது

மெல்லிய மேனியும் சில்லென ஆனது

வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது

ஏடென்று இதயம் இருக்க நூலொன்று இதயம் எழுதாதோ

இளமையின் இலக்கணம் எடுத்து சொல்லிய 
இளைய கன்னிக்கு ஓம்

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ 
உயிரின் உணர்வுக்கு ஓம்


Popular Posts