Showing posts with label Deepa. Show all posts
Showing posts with label Deepa. Show all posts

Tuesday, July 27, 2010

Rosaapoo Ravikkaikkaari - Enullil Engo

படம் : ரோசாப்பூ ரவிக்கைகாரி (1979)
இசை : இளையராஜா
பாடியவர் : வாணி ஜெயராம்
பாடல் வரி : புலமைபித்தன்
Image result for Rosaapoo Ravikkaikkaari

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்...
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது


என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க - பங்குவைக்க
பொங்கிடும் பூம்புனலில்.... ஆ... ஆ... ஆ... ஆ.......
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலின்
போதையிலே மனம் பொங்கி நிற்க தங்கி நிற்க
காலம் இன்றே தீராதோ
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது


மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே - மோகங்களே
மல்லிகை மாலைகளே... ஆ... ஆ... ஆ...
மல்லிகை முல்லையின் மாலைகளே
மார்கழி மாதத்துக் காலைகளே சோலைகளே
என்றும் என்னைக் கூடாயோ

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்...
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

Popular Posts