Showing posts with label Arjun. Show all posts
Showing posts with label Arjun. Show all posts

Wednesday, March 20, 2013

கர்ணா - மலரே மௌனமா


படம்: கர்ணா (1995)
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
பாடல்வரிகள்: வைரமுத்து




மலரே மௌனமா மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

மலரே மௌனமா மௌனமே வேதமா


பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ.... ஹா

மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ...ஓ

ஏதோ சுகம் உள்ளூறுதே

ஏனோ மனம் தள்ளாடுதே


ஏதோ சுகம் உள்ளூறுதே

ஏனோ மனம் தள்ளாடுதே


விரல்கள் தொடவா

விருந்தைத் தரவா

மார்போடு கண்கள் மூடவா


மலரே மௌனமா

மலர்கள் பேசு



கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்

காற்றை போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

காற்றே எனைக் கிள்ளாதிரு 

பூவே என்னைத் தள்ளாதிரு


காற்றே எனைக் கிள்ளாதிரு 

பூவே என்னைத் தள்ளாதிரு


உறவே உறவே

உயிரின் உயிரே

புது வாழ்கை தந்த வள்ளலே

மலரே.... மௌனமா மௌனமே வேதமா

மலர்கள்.... பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

மலரே.... ம்ம்ம்

மௌனமா.... ம்ம்ம்

மௌனமே.... ம்ம்ம்

வேதமா.... ஹா ஆஆ


Wednesday, February 20, 2013

வேதம் - கொஞ்சிக் கொஞ்சி

படம் : வேதம் (2001)
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : வைரமுத்து








கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ் போல 
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல 
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவி போல 
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் 
பூத்துவுகிறோம் 

கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ் போல 
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல 
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவி போல 
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் 
பூத்துவுகிறோம் 


இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட காரணமிருக்கிறதே 
கணவன் ஒரு வரி மனைவி ஒரு வரி அர்த்தம் கிடைக்கிறதே 
யார் பெரிதென்ற எண்ணங்கள் வேண்டாம் சிந்தித்துப்பாருங்களே 
சரிசமமாய் உள்ள துண்களில்தானே நிற்கும் கோபுரங்கள் 
சந்தேகம்தான் தீயை வைக்கும் நம்பிக்கைதான் தீபம் வைக்கும் 
இந்த விண்னும் மண்னும் உள்ள நாள் வாழ்க 



கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ் போல 
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல 
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவி போல 
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் 
பூத்துவுகிறோம்



அவர் அவர் எண்ணம் அவரவர்க்குண்டு ஆதிக்கம் வேண்டாமே
ஒரு தனிப்பட்ட சுதந்திரம் இருவருக்கிடையில் அவசியம் இருக்கட்டுமே 
ஒருவருக்கொருவர் பாசம் தந்து நண்பர்கள் ஆகுங்கள்
ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும் ஒன்றாய் உண்ணுங்கள்
கொஞ்சம் நீங்கள் விட்டுத்தந்தால் சொர்க்கம் உங்கள் வீட்டைத்தட்டும் 
காலம் எல்லாம் உங்கள் நெஞ்சில் பூப்பூக்கும் 


கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல 
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல 
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவிபோல 
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் 
பூத்துவுகிறோம் 


Monday, May 2, 2011

தாயின் மணிக்கொடி - நூறாண்டுக்கு ஒரு



படம் : தாயின் மணிக்கொடி (1998)
இசை : வித்யா சாகர்

பாடியவர் :  
கோபால் சர்மா, தேவி

பாடல் வரி : வைரமுத்து









நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா...


நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா


கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே என்னை கண்டேன்


கண்மூடினால் கண்மூடினால்
அந்நேரமும் உன்னை கண்டேன்


ஒரு விரல் என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா


மறு விரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா


உயிர் கொண்டு வாழும் நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா


நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா


இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா




ஒ... இதே சுகம் இதே சுகம்
என்னாளுமே கண்டால் என்ன


இந்நேரமே இந்நேரமே
என் ஜீவனும் போனால் என்ன


ம்... முத்தத்திலே பல வகை உண்டு
இன்று சொல்லட்டுமா கணக்கு


இப்படியே என்னை கட்டிக்கொள்ளு
மெல்ல விடியட்டும் கிழக்கு


அச்சப்பட வேண்டாம் பெண்மையே
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே


நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா


இதழோடு இதழ் சேர்த்து


உயிரோடு உயிர் கோர்த்து வாழவா


நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா

Popular Posts