Tuesday, July 3, 2018

Chinna Gounder - Antha Vaanatha Pola

படம்: சின்னக் கவுண்டர் (1992)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா
பாடல் வரிகள்: R.V.உதயகுமார்




அந்த வானத்த போல மனம் படிச்ச மன்னவனே
பனிதுளிய போல குணம் படைச்ச தென்னவனே
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு?... அது மன்னவன் பேரு
அந்த வானத்த போல மனம் படிச்ச மன்னவனே
பனிதுளிய போல குணம் படைச்ச தென்னவனே


மாறி போன போதும் இது தேரு போகும் வீதி
வாரி வாரி தூத்தும் இனி யாரு உனக்கு நாதி
பாசம் வைத்ததாலே நீ பயிரை காத்த வேலி
பயிரைக் காத்த போதும் வீண் பழியை சுமந்த நீதி
சாமி வந்து கேட்டிடுமா? வீண் பழியை தீர்த்திடுமா?
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு?... அது மன்னவன் பேரு
அந்த வானத்த போல மனம் படிச்ச மன்னவனே
பனிதுளிய போல குணம் படைச்ச தென்னவனே


நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு?
துன்பம் வந்த போதும் அதை துடைப்பதிங்கு யாரு? 
கலங்கும்போது சேறு அது தெளியும் போது நீரு
கடவுள் போட்ட கோடு அதை திருத்த போவதாரு? 
வெந்த புண்ணும் ஆறிடுமா? வேதனை தான் தீர்ந்திடுமா?
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு?... அது மன்னவன் பேரு

அந்த வானத்த போல மனம் படிச்ச மன்னவனே
பனிதுளிய போல குணம் படைச்ச தென்னவனே
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு?... அது மன்னவன் பேரு
அந்த வானத்த போல மனம் படிச்ச மன்னவனே
பனிதுளிய போல குணம் படைச்ச தென்னவனே

Popular Posts