Monday, December 4, 2017

Mersal - Neethanee

படம்: மெர்சல் (2017)
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: A.R.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரிகள்: விவேக்
Image result for mersal songs download
நீதானே... நீதானே...
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்.
நீதானே... நீதானே...
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்

என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ...
நீதானே நீதானே
என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையில் உன் பால் பிம்பம்
நாம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதில் எட்டும்
நாம் கையில் மாற்றிக் கொள்ள
பொன் திங்கள் விழும்

யாச்சே யாச்சே... யாச்சே யாச்சே...
யாச்சே யாச்சே... யாச்சே யாச்சே...
யாச்சே யாச்சே... யாச்சே யாச்சே...
துளி மையல் உண்டாச்சே...
நீதானே... நீதானே...
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே....
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக் கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ...
நீதானே... நீதானே...

Popular Posts