படம்: திருடன் போலீஸ் (2014)
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஹரசுதன், பூஜா
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஹரசுதன், பூஜா
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்
பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா
நெருங்காதே நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா
என் நெஞ்சில் வந்தே என்னென்ன செய்தாய்
மிதக்கிறேன் காற்றாக
உன் பேரைத்தானே என் நெஞ்சில் இன்று
இசைக்கிறேன் பாட்டாக
பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா
கண்ணில் உன்னை அளந்தது கொஞ்சம்
கண்ணை மூடி ரசித்தது கொஞ்சம்
இன்னும் என்ன சொல்ல அன்பே
தெரியாமல் நான் தவித்தேனே
உன்னால் என்னை இழந்தது கொஞ்சம்
உன்னால் என்னை அடைந்தது கொஞ்சம்
இன்னும் என்ன சொல்ல அன்பே
புரியாமல் நான் துடித்தேனே
காதல் என்று சொன்னால் நீண்ட மயக்கம்
இன்று புரிகின்றதே
உன்னால் எந்தன் பெண்மை புதிய தயக்கம்
இன்று அறிகின்றதே
நீ என்ன சொல்ல நான் என்ன சொல்ல
வார்த்தைகள் தேவைதானா
நீ என்னை வெல்ல நான் உன்னை வெல்ல
ஆனாலும் இந்த காதல் போரில் யுத்தம் அடங்காதே
பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா
நெருங்காதே நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா