Sunday, April 23, 2017

Namma Ooru - Music Album

படம்: நம்ம ஊரு (2016)
இசை:  பைஜு ஜேக்கப்
பாடியவர்கள்: அஜிஸ் அசோக்
பாடல்வரிகள்: அகின் பிரபு






கண் முழிச்சி பாக்கையில 
காலு ரெண்டும் ஆட்டம் போட‌
விண்டு மில்லு  சுத்தும் போது
நெஞ்சுக்குள்ள ஆட்டம் பாட்டம்
ஏ... ஹே... ஹே...

எங்கூரு போக போறேன்
உசுர எல்லாம் பாக்க போறேன்
ஹே... எங்கூரு போக போறேன்
உசுர எல்லாம் பாக்க போறேன்

எங்கூரு போக போறேன் உசுர எல்லாம் பாக்க போறேன்
பச்சமல ஏறி நின்னு பாடும் குயில் ஆக போறேன்
பள்ளிகூட வாசல் தேடி மீண்டும் போயி நிக்க போறேன்
காடு மேடு கம்மா தாண்டி களத்து மேட்ட பாக்க போறேன்
எங்கூரு போக போறேன் உசுர எல்லாம் பாக்க போறேன்
பச்சமல ஏறி நின்னு பாடும் குயில் ஆக போறேன்

ஏலே மக்கா... ஏலே...
ஏலே மக்கா... வாலே...
வாலே....... வாலே.......லே.. லே...

ஏலே மக்கா... ஏலே மக்கா... 
ஏலே மக்கா... ஏ... ஏ... ஏ... ஏ...


சொந்தபந்தம் பாத்த போகும் ஏழு ஜென்மம் காத்தா
மீண்டும் ஒரு ஜென்மம் கேட்டு சாமிகிட்ட போவேன்
கோயிலுக்கு போகும் எங்க ஊரு பொண்ண பாத்தா
சாமியினு நெனைச்சு கை தானா வணங்கும்
மலமேல பனி போல மனசெல்லாம் பூ பூக்கும்
போற வழி தோட்டம் எல்லாம் எங்க தோட்டம் தான்
பாக்குறவன் எல்லாம் எங்க மாமன் மச்சான் தான்
யே... ஊரு மொத்தம் எங்க வீடு பசிய யாரும் பார்த்ததில்ல‌


வீரபாண்டி பார்த்து அட வீரம் சேர்த்த மண்ணு
தீண்டும் பல தோழன் கூட தோள தட்டி போவோம்
பச்சரிசி முருக்கு அட இளநீர எறக்கு
பஞ்சு மெத்த போல புல்லுமேடு இருக்கு
கடலோர அலபோல கனவெல்லாம் தெனம் வீசும்
பூத்ததில்ல‌ பாத்த‌ வர தோயில தோட்டம்
பாத்ததில்ல நேத்து வர சாதிக கூட்டம்
ஹே... வள்ளுவர் வாக்கோடு வாழும் மண்ணு நம்ம ஊரு



Popular Posts