Thursday, October 6, 2016

Theri - En Jeevan

படம்: தெறி (2016)
இசை: G.V. பிரகாஷ் 
பாடியவர்கள்: சைந்தவி, ஹரிஹரன், வைக்கம் விஜயலெட்சுமி
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்


Image result




உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர் துளி
உன் மார்பில் சாய்ந்து சாக தோணுதே... ஓ... ஓ...

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே

உபய குசல சிரஜீவன ப்ரசுத்த பரித மஞ்சுள தர 

சுந்தாரே... சஞ்சாரே ...
அதர ருஜித மதுரித பக சுதன கனக ப்ரசம நிரத 
பாங்கன்யே... மாங்கல்யே...
மமதம சகி சமதச சத முக மனசுப சுமநலயிவ 
சுசுத சஹித தாமம்...விரஹ ரஹித பாவம் ...
ஆனந்த போகம்... ஆஜீவ காலம் ...
பாசானு பந்தம்... காலானு காலம்...
தெய்வானுகூலம் ...காவ்யாத்த சித்திம்... கா.....மயே...

விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும்

மடிமீது சாய்ந்து கதை பேச வேண்டும்

முடியாத பார்வை நீ வீச‌ வேண்டும்

முழுநேரம் என்மேல் உன்வாசம் வேண்டும்

இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை

நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே


ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்

அதையாவும் பேச பல ஜென்மம் வேண்டும்

ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து

ஒன்னோடு இன்றே நான் வாழவேண்டும்

காலம் முடியலாம் நம் காதல் முடியுமா

நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே... ஓ... ஓ...
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே

உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர் துளி
உன் மார்பில் சாய்ந்து சாக தோணுதே


Popular Posts