Tuesday, March 18, 2014

நிமிர்ந்து நில் - நெகிழியினில்

படம்: நிமிர்ந்து நில் (2014)
இசை: G.V.பிரகாஷ்  
பாடியவர்கள்: ஹரிசரண், சைந்தவி 
பாடல்வரிகள்: மதன் கார்க்கி




ஹா... ஹா....
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்
அணையும் திரி தூண்டிட ஒளி மீண்டிட
எனை தீண்டிடு உயிரே
இவளின் துயர் தீர்த்திட வழி சேர்த்திட
விரல் கோர்த்திடு உயிரே

நாலாபுறமும் நாலாயிரம் நீ
ஆனாலும் உனை ஏன் தேடினேன்

நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்


ஹோ....ஓ  ஹோ....ஓ 
ஹோ ஓ ஓ... ஹோ ஓ ஓ...

ஹே... பவழப் பாறை படலம் போலே
மனதில் நிறைந்தாய்
இமைகள் மூடி திறக்கும் முன்னே
எதனால் மறைந்தாய்

உண்மையில் உன் உண்மையில்
என் காதலை பிரிந்தேன்
இன்மையில் உன் இன்மையில் 
தனிமையை அறிந்தேன்
கடந்தோடிடும் கணம் யாவிலும்
எனதேக்கமே கனக்கும்

ஹே... நெகிழியினில் நெஞ்சம் என்றாய்
நெருப்பை ஏன் கேட்கிறாய்
நெருஞ்சி முள்ளை போலே நின்றேன்
நெருங்கி வரப் பார்க்கிறாய்


ஹோ....ஓ ஹோ....ஓ
ஹோ ஓ ஓ... ஹோ ஓ ஓ...

உலகம் அறியா குழந்தை எனவே
உனை நான் நினைத்தேன்
உனையே உலகம் வணங்கும் பொழுதென்
மடமை உணர்ந்தேன்

மாற்றிட எனை மாற்றிட 
இந்த பூமியே நினைக்க
காதலே நீ மாறினாய்
இதை எங்கு நான் உரைக்க

எனை ஏற்றிடு உனை ஊற்றிடு 
உயிரேற்றிடு உயிரே


நாலாபுறமும் நாலாயிரம் நீ
ஆனாலும் உனை ஏன் தேடினேன்

ஹோ....ஓ ஹோ....ஓ
ஹோ ஓ ஓ... ஹோ ஓ ஓ...
ஓ ஓ... ஓ ஓ... ஹோ ஓ ஓ...
ஹோ ஓ ஓ... ஹோ ஓ ஓ...

Popular Posts