Sunday, April 14, 2013

வானத்தைப்போல - எங்கள் வீட்டில் எல்லா நாளும்

படம்: வானத்தைப்போல (2000)
இசை: S.A.ராஜ்குமார்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், அருண்மொழி, சுஜாதா





எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை


பாடும் பறவை கூட்டங்களே பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே அன்னை ஆனதை பாருங்கள்
சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூட்டினாய்
சிறகடிக்கும் பறவைக்கெல்லாம் வானத்தை போல மாறினாய்
விழியோடு நீ குடையாவதால் விழிகள் நனைவதில்லை
நெஞ்சில் பூமழை...

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை


எங்கள் சொந்தம் பார்த்தாலே சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே பூவின் ஆயுள் கூடுமே
இரண்டு கண்கள் என்றாலும் பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே தனித்தனிதான் உள்ளம் என்றும் ஒன்றுதான்
ஒரு சேவல் தான் அடைகாத்தது இந்த அதிசயம் பாருங்கள்
அண்ணனை வாழ்த்துங்கள்...

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

Popular Posts