Monday, February 11, 2013

ஜாலி - நந்தவனமே நந்தவனமே

படம்: ஜாலி (1998)
இசை: கவி
பாடியவர்கள்: ஹரிஹரன்

Click To View Gallery



ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்... ம்ம்...

நந்தவனமே நந்தவனமே சொந்தம் சொல்லி போகிறோம்
இந்த நினைவில் எந்த நிலவில் எங்கு ஒன்று சேருவோம்
நடந்த பாதைகள் திரும்பிடுமா
கடந்த காலங்கள் இனி வருமா
இன்று இந்த நாள் ஏன் வந்தது
உயிரை வழி அனுப்ப உடல்கள் கூடும் தினமோ... ஒ ஒ ஒ
நந்தவனமே நந்தவனமே சொந்தம் சொல்லி போகிறோம்

ம்ம்ம்ம்....


முத்து முத்து பனித்துளி புல்வெளியில் துள்ளி குதித்த காலமே
புகைப்படங்கள் ஆகுமே
வண்ண வண்ண மாடிகள் வகுப்பறைகள் வந்து நம்மை தேடுமே
நொந்து ஜன்னல் மூடுமே
வகுப்பிலே.... பெற்ற வரங்கள் சொல்லவா குரு தெய்வம் அல்லவா
கண்ணிரண்டில் சிந்துகின்ற நீரிலே நட்பின் கதைகளை சொல்லு ஊரிலே
பரீட்சை முடிந்த பின்னும் பயணம் முடிவதில்லையே
நந்தவனமே நந்தவனமே சொந்தம் சொல்லி போகிறோம்



சின்ன சின்ன ஊடல்கள் சில நேரம் நம்மை சீண்டி பார்த்தது
அன்பில் அனைத்தும் தோற்றது
என்ன என்ன தவறுகள் செய்தாலும் அதை மறக்கும் நாளிது
நட்பின் மகுடம் தானிது

நண்பனே... நாளை கடிதம் போடுவேன் என் கவலை தீருதே
கட்டிடமும் கலங்கிடும் நாளிது அட ஆறுதல் இனி யார் சொல்வது
பிரிந்து போவதற்கு கூடும் கூட்டம் இதுவோ... ஒ ஒ ஒ

நந்தவனமே நந்தவனமே சொந்தம் சொல்லி போகிறோம்
நந்தவனமே....

ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்... 



Popular Posts