Tuesday, August 2, 2011

பாடு நிலாவே - மலையோரம்

படம் : பாடு நிலாவே (1987)
இசை : இளையராஜா
பாடகர் : S.P.B
பாடல் வரி : வாலி

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா... கேக்குதா...
மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா... கேக்குதா...
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா
மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா... கேக்குதா...

வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசாப்பூ கை கலக்கக் கூடாதா
ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே
இல்லாத பாரமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவ நாளும் தேடும் வானம் நான்

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா... கேக்குதா...

குத்தாலத்து தேனருவி சித்தாடை தான் கட்டாதா
சித்தாடையக் கட்டி எழ கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட
ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்

Popular Posts