Thursday, July 14, 2011

ஆனந்த தாண்டவம் - பூவினை திறந்து

படம் : ஆனந்த தாண்டவம் (2008)
இசை : G.V. பிரகாஷ்
பாடியவர் : ஸ்ரீனிவாஸ், ஸ்ரேயாகோஷல்
பாடல் வரி : வைரமுத்து






பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சினேகமே

காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்

நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

தண்டவாளம் பக்கம் பக்கம்
தொட்டு கொள்ள நியாயம் இல்லை
நீயும் நானும் பக்கம் பக்கம்
கட்டி கொள்ள சொந்தம் இல்லை

வாசனை தீண்டிட நினைக்கிறாய் அது வசப்பட போவதில்லை
வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுகள் சேர்வதில்லை
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

இதய கூட்டை பூட்டிக் கொண்டேன்
கதவை தட்டி கலகம் செய்தாய்
கதவை பூட்டி உள்ளே சென்றேன்
கண்கள் வழியே மீண்டும் வந்தாய்

வருஷங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு
வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு


பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சினேகமே

விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்

நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்

Popular Posts