Wednesday, April 20, 2011

Piriyadha Varam Vendum - Vidaikodu Vidaikodu

படம் : பிரியாத வரம் வேண்டும் (2001)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : உன்னிகிருஷ்ணன், சொர்ணலதா
பாடல் வரி : 
வைரமுத்து









ஒஹோ... ஹோ... ஒ...
ஒஹோ... ஹோ... 

விடை கொடு விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது
வழி விடு வழி விடு உயிரே
உடல் மட்டும் போகிறது

உயிர் சுனை ஊற்றிலே
நெருப்பினை ஊற்றினாய்
பெளர்ணமி கோப்பையில்
இருள் குடித்தாய்

ஒஹோ... ஹோ... ஒ...
ஒஹோ... ஹோ... 



உள்ளங்கையில் நானே 
உயிரை ஊற்றி பார்த்தேன்
போவதாய் வருகிறாய் 
நூறு முறை தானே

இன்றே விடை கொடு 
என்றுனை கேட்கின்ற
வார்த்தையில் மெளனத்தில் 
இடருகிறாய்

உள்ளே நடைபெறும் நாடகம் 
திரை விழும் வேளையில்
மேடையில் தோன்றுகிறாய்

தனி தனி காயமாய் 
ரணப்பட தோணுதே

விடைகளே கேள்வியாய் 
ஆகிறதே

ஒஹோ ஹோ ஒ...
ஒஹோ ஹோ 

விடை கொடு விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது


ஒஹோ ஹோ ஒ...
ஒஹோ ஹோ 

நிலவின் பேச்சை கேட்டேன்
மொழியை பிழிந்து போட்டேன்
வாழ்த்தினேன் வருகிறேன்
நியாபகத்தை கோர்த்தேன்

உந்தன் காதலை நட்பில்
மூடிய இதயத்தை 
ஒரு முறை வெளியில் எடு 

உந்தன் சாலைகள் 
நெடுகிலும் பூ விழும்
மரங்களை வளர்க்கிற 
உரிமை கொடு

நீர் குமிழ் மீதிலே 
கடல் சுமை ஏற்றினாய்
எதிர் திசை தூரமே 
அழைக்கிறதே

ஒஹோ ஹோ ஒ...
ஒஹோ ஹோ 

விடை கொடு விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது
வழி விடு வழி விடு உயிரே
உடல் மட்டும் போகிறது

உயிர் சுனை ஊற்றிலே
நெருப்பினை ஊற்றினாய்
பெளர்ணமி கோப்பையில்
இருள் குடித்தாய்

ஒஹோ ஹோ ஒ...
ஒஹோ ஹோ 

Popular Posts