Skip to main content

கீரிடம் - அக்கம் பக்கம்படம் : கீரிடம் (2007)
இசை : G.V. பிரகாஷ்

பாடியவர் : சாதனா சர்கம்

பாடல் வரி :  நா.முத்துகுமார்

  அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்


நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்

அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்

தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
நீயும் நானும் சேரும் முன்னே 
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே 
நேரம் காலம் தெரியாமல் 
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே 
உன்னால் இன்று பெண்ணாகவே 
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன் 
உன் தீண்டலில் என் தேகத்தில் 
புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன் 
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்


Popular posts from this blog

கர்ணன் - உள்ளத்தில் நல்ல

படம் : கர்ணன் (1964)
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் : சீர்காழி  கோவிந்தராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்Download this MP3
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது 
வல்லவன் வகுத்ததடா கர்ணா... 
வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது 
வல்லவன் வகுத்ததடா கர்ணா... 
வருவதை எதிர்கொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது 
வல்லவன் வகுத்ததடா கர்ணா... 
வருவதை எதிர்கொள்ளடா


மன்னவர் பணியேற்கும் கண்ணனும்
பணி செய்ய உன்னடி பணிவானடா
கர்ணா... மன்னித்து அருள்வாயடா
கர்ணா... மன்னித்து அருள்வாயடா


செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா 
கர்ணா... வஞ்சகன் கண்ணனடா
கர்ணா... வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது 
வல்லவன் வகுத்ததடா கர்ணா... 
வருவதை எதிர்கொள்ளடா ஒரு நாள் கூத்து - அடியே அழகே

படம்: ஒரு நாள் கூத்து (2016)
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
பாடியவர்: ஷான் ரோல்டன், பத்மலதா 
பாடல்வரிகள்: விவேக்
Download this MP3
அடியே அழகே... என் அழகே அடியே...
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே... என் ஒளியே ஒளியே...
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஒடாத
காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்சக் காதல் உள்ள ஊறுதே
வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கிப் போற

அடியே அழகே... என் அழகே அடியே...
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே... என் ஒளியே ஒளியே...
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஒடாத


போனா போறா தானா வருவா
மெதப்புள்ள திரிஞ்சேன்
வீராப்பெல்லாம் வீணாப்போச்சு
பொசுக்குனு ஒடஞ்சேன்
உன் சுக‌ பார்வ உரசுது மேல‌
சிரிக்கிற ஒச சரிக்குது ஆள‌
தீ தூவி... ஹே... தீ தூவி போனா
அவ வேணும் நானும் வாழ


ஏனோ உன்ன பாத்தா உள்ள‌ சுருக்குனு வருது
ஆன கிட்ட நீயா வந்தா மனசு அங்க விழுது

ஏதுக்கு இந்த கோபம் நடிச்சது போதும்
மறச்சி நீ பார்த்தும் வெளுக்குது சாயம்

ஹே... நேத்தே நா தோத்தேன்
அட‌ இதுதானா உன் வேகம்


அடியே அழகே... அழகே... 
அழகே அடியே... அடியே...
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே... வலியே...
ஒளியே ஒளியே... ஒளியே.…

அவதாரம் - தென்றல் வந்து

படம்: அவதாரம் (1995)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, S. ஜானகி பாடல் வரிகள்: வாலிDownload this MP3
தானத் தந்தத் தானத் தந்தத் தனனா தானத் தந்தத் தானத் தந்தத் தனனா...... தானத் தந்தத் தானத் தந்தத் தனனா தானத் தந்தத் தானத் தந்தத் தனனா
தந்தனன..... தானனான.... தானனான.... தந்தனன..... தானனான.... தானனான.... தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல


தம் தம் தம்......  தம் தம் தம்......  தம் தம் தம்......  ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ....
விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓடை நீரோடை இந்த உலகம் அது போல

ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல