Wednesday, August 3, 2011

முதல் மரியாதை - ராசாவே

படம் : முதல் மரியாதை (1985)
இசை : இளையராஜா
பாடியவர் : S. ஜானகி
பாடல் வரி : வைரமுத்து

ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... 
ஒ... ஒ... ஒ... ஒ...

ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்க
ஒரு வார்த்த சொல்லிடிங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவ இவ நெஞ்சோட வளத்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா
ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்க

பழச மறக்கலியே பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் எனையும் வச்சி ஊரு ஜனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அரும குறஞ்சீக
தரும மகாராசா தலைய கவுந்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு
அதுக்கும் நிலானு தான் பேரு
அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு
ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்க

காதுல நறச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
சூழியிலே படகு போல என் மனசு சுத்துது சுத்துது
பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு
விவரம் தெரியாம மனசும் நனஞ்சாச்சு
உனக்கே வச்சிருகேன் மூச்சு
எதுக்கு இந்த கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வச்சி ஊருக்குள்ள பேச்சு

Popular Posts