Showing posts with label Tabu. Show all posts
Showing posts with label Tabu. Show all posts

Monday, February 25, 2013

Kadhal Desam - Thendrale Thendrale

படம் : காதல் தேசம் (1996)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன், மனோ
பாடல்வரிகள் : வாலி




ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்.... ம்ம்.... ம்ம்
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு


காதல் என்றால் கவலையா
கண்ணில் நீரின் திவலையா
நோயானேன் உயிரும் நீயானேன்
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்க வைக்கும் நிலவே தூக்கமின்றி
நீயே வாடினாயோ

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு


மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா
பூமி யாவும் தூங்கும் போது
பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்கு தெரியும்
என் மனதின் காதல் தெரியமா
சொல்ல வார்த்தை கோடி தான்
உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்
தூங்க வைக்க பாடினேன்
நான் தூக்கமின்றி வாடினேன்

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்.... 



Tuesday, January 1, 2013

Iruvar - Unnodu Nan Iruntha

படம் : இருவர் (1997)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : அரவிந்த்சாமி, டோமினிக்
பாடல்வரிகள் : வைரமுத்து






என் காதலி... என் கண்மனி... என் சிநேகிதி...

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே


தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்

இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை

யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வி இல்லை

அச்சம் களைந்தேன் ஆசையினை நீ அணிந்தாய்
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்

கண்ட திருகோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே



Thursday, December 27, 2012

சிநேகிதியே - ராதை மனதில்


படம் : சிநேகிதியே (2000)
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : சுஜாதா, சித்ரா, சங்கீதா சஜித்
பாடல்வரிகள் : வைரமுத்து





ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுப்பிடிக்க

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுப்பிடிக்க


கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில்
கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன்
மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும்
பாவை மறந்து தொலைத்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை இழுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில் இருதயம் காணவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுப்பிடிக்க


கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு
காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது
மாய கண்ணன் வழக்கம்
காடு இருண்டு விட கண்கள் சிவந்து விட
காதல் ராதை அலைந்தாள்
அவனை தேடி அவள் தன்னை தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை
உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை
போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்
பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா இங்கே வா  வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க


கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று
அந்த கண்ணி கண்கள் விழித்தாள்
கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல
வெறும் காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை
சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின்
நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாள்
கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு
கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு
கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கரையும் முன்
உடல் மண்ணில் சரியும் முன்
கண்ணா கண்ணா நீ வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..



Tuesday, January 4, 2011

காதல் தேசம் - எனைக் காணவில்லையே



படம் : காதல் தேசம் (1996)
இசை : 
A.R. ரஹ்மான்

பாடியவர் :  O.S.அருண், ரபி, S.P. பாலசுப்ரமணியம்

பாடல் வரி : வாலி




அன்பே... அன்பே... யே யே



அன்பே...யே யே  அன்பே... 

எனைக் காணவில்லையே நேற்றோடு 
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு 
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே... 
நான் நிழலில்லாதவன் தெரியாதா 
என் நிழலும் நீயெனப் புரியாதா 
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே... 

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே 
வா வா... என் வாசல்தான்... 
வந்தால்... வாழ்வேனே நான் 


எனைக் காணவில்லையே நேற்றோடு 
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு 
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே... 

ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும் 
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக்கூடும் 
கண்ணே நம் கண்கள் சந்தித்தால் 

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீ தான் 
நீ இன்றி வாழ்ந்தாலே நீர் கூடத் தீ தான் 
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான் 


எனைக் காணவில்லையே நேற்றோடு 
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு 
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே... 
நான் நிழலில்லாதவன் தெரியாதா 
என் நிழலும் நீயெனப் புரியாதா 
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே... 


நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும் 
நீ என்னை நீங்கிச் சென்றாலே 
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும் 

நீ எந்தன் பக்கம் நின்றாலே 

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் 
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் 
நிஜம் உந்தன் காதலென்றால் 




எனைக் காணவில்லையே நேற்றோடு 
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு 
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே... 
நான் நிழலில்லாதவன் தெரியாதா 
என் நிழலும் நீயெனப் புரியாதா 
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே... 




நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே 
வா வா... என் வாசல்தான்... 
வந்தால்... வாழ்வேனே நான் 

எனைக் காணவில்லையே நேற்றோடு 
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு 
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே... 

Wednesday, August 25, 2010

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - சந்தனத் தென்றலை



படம் :கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
இசை :A.R. ரஹ்மான்
பாடியவர் :சங்கர் மகாதேவன்

பாடல் வரி: வைரமுத்து


 




இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன 
மௌனமா மௌனமா
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்
நியாயமா நியாயமாகாதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன 
மௌனமா மௌனமா

அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்



இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்..
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்
நியாயமா நியாயமாகாதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌளனமா மௌளனமா

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா

என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய் 
என்ன சொல்லப் போகிறாய் நியாயமா நியாயமா
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய் மௌனமா மௌனமா
என்ன சொல்லப் போகிறாய்

Popular Posts