Showing posts with label Suchith Suresan. Show all posts
Showing posts with label Suchith Suresan. Show all posts

Monday, June 4, 2012

நண்பன் - என் ப்ரெண்ட போல



படம் : நண்பன் (2012)
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கீரிஷ், சுசீத் சுரேஷன்
பாடல்வரி : விவேகா









என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பாலே நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்


தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ளபடி
என்றும் நட்பு தான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலே நின்றோம்
புதுப் பாதை நீயே போட்டு தந்தாய்
ஏன் பாதி வழியில் விட்டுச் சென்றாய்
ஒரு தாயை தேடும் பிள்ளையானோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்


என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என எண்ணி எண்ணி ஏங்க வச்சான்




Popular Posts