Showing posts with label Shaam. Show all posts
Showing posts with label Shaam. Show all posts

Thursday, July 25, 2013

பாலா - பூ பூவாய் புன்னகைக்கும்

படம் : பாலா (2002)
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் :  உன்னி மேனன், கங்கா
பாடல்வரிகள்: அறிவுமதி



ஆ... ஆ... ஆஆ
ஹா ஆ... ஆஆ... ஆ ஆ
ஆ ஆ ஆ... ஆ ஆஆ... ஆ
ஆஆஆ... ஆ ஆ ஆ...

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்
எங்கள் வீட்டு புது கவிதை
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை
இவள் எங்கள் கை குழந்தை
புல்வெளிகளில் நீ போனால்
வெண்பனிதுளி கால் கீறும்
நம் இதயங்கள் நான்கோடும்
இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்
எங்கள் வீட்டு புது கவிதை
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை
இவள் எங்கள் கை குழந்தை


எங்கள் இல்லத்திலே இன்ப நாடகம்தான்
இங்கே தேவையில்லை தொலைக்காட்சி
எங்கள் உள்ளத்திலே தினம் பூ மழைதான்
நாங்கள் செல்வதில்லை மலர்காட்சி
மழை வந்தால் அதில் நனைவோம்
அன்னை துவட்டும் சுகமும் கிடைக்க
வெயில் வந்தால் அதில் அலைவோம்
தந்தை அரட்டும் இனிமை ரசிக்க
கால்கொண்ட ரோஜா துள்ளி துள்ளி வந்து
தூணுக்கு பின்னால் நின்று சிரிக்கிறதே

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்
எங்கள் வீட்டு புது கவிதை
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை
இவள் எங்கள் கை குழந்தை
புல்வெளிகளில் நீ போனால்
வெண்பனிதுளி கால் கீறும்
நம் இதயங்கள் நான்கோடும்
இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே


ஆ... ஆ... ஆஆ
ஆ... ஆ... ஆஆ
ஆ... ஆ... ஆஆஆஆ

தாய் கட்டுகின்ற நூல் சேலையிலே
யார் போர்த்தயென்று அடம்பிடித்தோம்
மொட்டைமாடியிலே ஒரு தட்டினிலே
நெய் சோறு வச்சு உயிர் ருசித்தோம்
ஒரே ஒரே மின் விசிறி
அதன் அடியில் தூங்கி கிடைப்போம்
இன்னும் தந்தை தோளில்
சிறு குழந்தையாக இருப்போம்
பூமியில் சொர்க்கம் உள்ளதென்று சொன்னால்
வேறெங்கும் இல்லை அது எங்கள் இல்லமே...

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்
எங்கள் வீட்டு புது கவிதை
ஹே... தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை
இவள் எங்கள் கை குழந்தை
புல்வெளிகளில் நீ போனால்
வெண்பனிதுளி கால் கீறும்
நம் இதயங்கள் நான்கோடும்
இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே


Sunday, May 20, 2012

லேசா லேசா - ஏதோ ஒன்று



படம் : லேசா லேசா (2002)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்

பாடியவர் : ஹரீஸ்ராகவேந்திரா, பிரான்கோ, ஸ்ரீலேகா பார்த்தசாரதி
பாடலாசிரியர் : வாலி









ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்



ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
ஒரு ஆசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்
ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்


நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது


தாய்மடியில் சேய் தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியே விடலாமா


குழந்தையும் குமரி என்றாயாச்சே
கொஞ்சிடும் பருவமும் போயாச்சே
மனம் போலே மகள் வாழ
நீ வாழ்த்தும் தாயாச்சே



ஒ... ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கேன செய்வாயோ


இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொழுவேன் தவறாது


என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னமும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா



ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்


உல்லாஹி... உல்லாஹி... லாஹி...


உல்லாஹி... உல்லாஹி... லாஹி...


உல்லாஹி... உல்லாஹி... லாஹி...


உல்லாஹி... உல்லாஹி.......... லாஹி...

Friday, March 18, 2011

இயற்கை - காதல் வந்தால்




படம் : இயற்கை (2003)
இசை :வித்யா சாகர்

பாடியவர் : 
திப்பு
பாடல் வரி : வைரமுத்து









Babe... Tell me you love me
I hope, I hear it when I'm in love


காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி


சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி


காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன்


உயிரை தவிர சொந்தம் இல்லையே 
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே 
காதல் வந்த பின்பு


Babe... Tell me you love me
It's never late... Don't hesitate


சாவை அழைத்து கடிதம் கேட்டேன் 
காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன் 
காதல் வந்த பின்பு


உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி ...


காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன்


பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் 
உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் 
உன்னை கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை 
நான் கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் 
உன்னை கண்ட பின்பு


பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை
அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை
நான் கரையாவதும் இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி 


காதல் வந்தால் சொல்லி அனுப்பு
காதல் வந்தால் சொல்லி அனுப்பு...  
சொல்லி அனுப்பு... சொல்லி அனுப்பு... 

Saturday, August 28, 2010

உள்ளம் கேட்குமே - ஓ மனமே









படம்: உள்ளம் கேட்குமே (2005)
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள்: ஹரிஹரன்






ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்







ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து

வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்
கணுக்கள்தோறும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா
தோல்விகள் இன்றி பூரணமா







ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்


இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி



ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார் யார்

ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே

Popular Posts