Showing posts with label Sambasivam. Show all posts
Showing posts with label Sambasivam. Show all posts

Thursday, May 17, 2018

Kathiravanin Kodai Mazhai - Nellai Cheemaiyile

படம்: கதிரவனின் கோடை மழை (2016)
இசை : சாம்பசிவம்
பாடகர்கள் : ஹரிசரண்
பாடல்வரிகள்: வைரமுத்து

Image result for kathiravanin kodai mazhai



அடி யலல... அடி யலல... அடி யலல... அடியே...
அடி யலல... அடி யலல... அடி யலல... அடியே...
அடி யலல... அடி யலல... அடி யலல... அடியே...
அடி யலல... அடி யலல... அடி யலல... அடியே...


நெல்லசீமையில வந்து பொறந்த நெல்லு நெறத்தாலே
நித்தம் நித்தம் நீ எங்க வீட்டுக்கு வந்து போறியாலே
மையல் வருகுதுல மசமசனு ஆகுதுலே
ஏ.. கண்டாங்கி வீட்டுமேலே ரெண்டானா துள்ளலுல‌
எட்டி தொடாமலே என்னுசுரு வேகாதுலே
முழுமூச்சு நின்னுபோச்சு முழங்காலு காங்காமலே
யே.....


சோடிகிளி ஒன்ரெண்டு கன்னமும் சோளப்பனியாரம்
அதில் ஒன்ன விட்டு ஒன்னு மட்டும் தாலே தாலே
கண்ணு முழியில் கத்தி வீசுதே கன்னி அலங்காரம்
நா வெட்கம் எல்லாம் விட்டு கேட்கேன் வாலே வாலே
இறுக்கு முடிஞ்சி வச்ச ஏழ நெஞ்சு
சிறுக்கி பார்வையில அவுந்தே போச்சு
ஏ... பெருசா பூத்தவளே வெரசா காய்ச்சவளே வாலே
எனக்கு வாச்சவளே இன்னைக்கு ஏச்சவளே
நடுக்காட்டில் என்ன விட்டு போகாதே போகாதே


தெக்கு வடக்க காத்து அடிக்கும் நெல்லசீம வழக்கம்
நீ போறபக்கம் வீசுதுல காத்து காத்து
பத்து மாசமும் காஞ்சிகெடக்கும் எங்க ஊரு வழக்கம்
ஒன் பாதம் பட்டு பொங்குதடி ஊத்து ஊத்து
வானம் பூமியெல்லாம் நீயா நீயா
மத்த காட்சியெல்லாம் பொய்யா பொய்யா
ஏ... படுத்தா ஒறக்கமில்ல பாய்விரிச்சா தூக்கமில்ல வாலே
சாவி கோழி நீ எனக்கு சண்ட சேவல் நான் உனக்கு
நெஞ்சோடு வஞ்சம் கத்த நீவாலே நீவாலே


நெல்லசீமையில வந்து பொறந்த நெல்லு நெறத்தாலே
நித்தம் நித்தம் நீ எங்க வீட்டுக்கு வந்து போறியாலே
மையல் வருகுதுல மசமசனு ஆகுதுலே
ஏ.. கண்டாங்கி வீட்டுமேலே ரெண்டானா துள்ளலுல‌
எட்டி தொடாமலே என்னுசுரு வேகாதுலே
முழு மூச்சு நின்னுபோச்சு முழங்காலு காங்காமலே
யே.....




Kathiravanin Kodai Mazhai - Pothi Vacha

படம்: கதிரவனின் கோடை மழை (2016)
இசை : சாம்பசிவம்
பாடகர்கள் : கார்த்திக், பார்வதி
பாடல்வரிகள்: வைரமுத்து


Image result for kathiravanin kodai mazhai



ஓ... ஹோ...ஓஓஓ... ஓ... ஹோ..

ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்...
பொத்தி வச்ச மல்லிக மொட்டு 
பாடனும் போல் இருக்கு

ஒரு போர்வைகுள்ளே இரண்டு பேரும்
தூங்கனும் போல் இருக்கு

நடு முதுகில் நண்டு ஒன்னு
ஊர்வது போல் இருக்கு

அது நண்டு இல்ல நாந்தாமுனு 
சொல்லனும் போல் இருக்கு

பொத்தி வச்ச மல்லிக மொட்டு 
பாடனும் போல் இருக்கு

ஒரு போர்வைகுள்ளே இரண்டு பேரும்
தூங்கனும் போல் இருக்கு

நடு முதுகில் நண்டு ஒன்னு
ஊர்வது போல் இருக்கு

அது நண்டு இல்ல நாந்தாமுனு 
சொல்லனும் போல் இருக்கு


ஒருநா ஒருபொழுது ஒம்மொகத்த காங்காட்டி
ஒறக்கம் வருகுதுல உசுரும் புடிக்குதுல‌

சந்தன கின்டியில சாதமிட்டு உங்கயில‌
ஒங்கல நெனச்சாக்கா உங்குறது சாதமில்ல‌

ஏ.. உள்ளூரு மயிலே உள்ளங்கை சக்கரையே
உசுர் போகும் வேளையிலும் ஒரு சொந்தம் நீதானே

ஒலகம் முடிச்சாலும் ஒம்மார்பில் நான் இருப்பேன்
உசுரே பிரிஞ்சாலும் ஒம்மடியில் உசுர் விடுவேன்


வாக மரத்தடியில் வண்ணமணல் கோலமிட்டு
தோக இளமயில தொட்டாடும் காலமெப்போ

பாசமுள்ள காதலியே பழுத்த பனம்பழமே
கழுத்தில் தாலியிட்டால் கன்னதானம் கூடுமப்போ

முனுமூடி போட்டு முந்தாணைபாய் போட்டு
எனுசுரும் ஒனுசுரும் இடம் மாற போறதெப்போ

கோலமயில் தடுமாற குங்குமமும் எடம்மாற‌
தங்கமடி வாய் செவக்க தாம்பூலம் மாறுமப்போ

பொத்தி வச்ச மல்லிக மொட்டு 
பாடனும் போல் இருக்கு

ஒரு போர்வைகுள்ளே இரண்டு பேரும்
தூங்கனும் போல் இருக்கு

நடு முதுகில் நண்டு ஒன்னு
ஊர்வது போல் இருக்கு

அது நண்டு இல்ல நாந்தாமுனு 

சொல்லனும் போல் இருக்கு

Kathiravanin Kodai Mazhai - Pattala Rasave

படம்: கதிரவனின் கோடை மழை (2016)
இசை : சாம்பசிவம்
பாடகர்கள் : சின்மயி
பாடல்வரிகள்: வைரமுத்து


Image result for kathiravanin kodai mazhai




ஓ... பட்டாள ராசாவே பட்டத்து ராசாவே
பாக்காம பாக்கயில தூரமா நின்னீரு
தூரமா போகயில பக்கமா ஆனீரு
நொட்டாங்கை நீட்டி நூறு புலி அடிப்பீரு
பக்கிமக எங்கிட்ட உக்கி போட்டு நிப்பீரு
கண்மூடும் வேளையில கண்ட இடம் தொடுவீரு
கண்ணு முழிச்சாக்கா கண்ணடியில் ஒளிவீரு


தென்காசி ரோட்டுவழி செல்லமயில் தோகையில‌
தெங்குசுவம் இழுக்குறதா பெருங்கனவு தோனுதுலா
வெள்ளி தேமலுக்கும் வெட்டிவிட்ட மீசைக்கும்
ஊரடி கரையோரம் ஒத்தயில நிக்குதேனே
அஞ்சுமணி சூரியனோ ஆகாயமார்க்கம் வரும்
எங்கூரு சூரியனே எந்த வழி வருவீரோ...
எந்த வழி வருவீரோ... எந்த வழி வருவீரோ...
எந்த வழி வருவீரோ...
பட்டாள ராசாவே பட்டத்து ராசாவே
பாக்காம பாக்கயில தூரமா நின்னீரு

கழுகுமலை குருவிகளும் கண்டெடுத்த குண்டுமுத்து
குண்டுமுத்து கோக்காம சுண்டுத்தே எங்கண்ணீரே
காக்கா கூடடய, காடைகளும் காடடய
ஆசவச்ச பாதஹ‌த்தி அடய ஒரு கூடு இல்லையே
பாசம் மாறி போகாம தேசம் மாறி போனவரே
ஒழுகும் உசுர் குடிக்க ஓடி வந்து சேருமைய்யா...
ஓடி வந்து சேருமைய்யா... ஓடி வந்து சேருமைய்யா...
ஓடி வந்து சேருமைய்யா...

Popular Posts