Showing posts with label Poornima Jayaram. Show all posts
Showing posts with label Poornima Jayaram. Show all posts

Tuesday, July 2, 2013

Payanangal Mudivathillai - Thogai Ilamayil

படம் : பயணங்கள் முடிவதில்லை (1982)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : வைரமுத்து


Image result for Payanangal Mudivathillai
Image result for payanangal mudivathillai



ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ...

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ


கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்

இதழ்களிலே பௌர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ


பூமி எங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும்

புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும்
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு...


Friday, December 28, 2012

Thanga Magan - Raathiriyil Poothirukkum

படம் : தங்கமகன் (1983)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
பாடல்வரிகள் : புலமைப்பித்தன்

Image result for thanga magan rajini




ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர  தூது விடும் கண்ணோ
சேலை சோலையே பருவ சுகம் தேடும் மாலையே
சேலை சோலையே பருவ சுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர  தூது விடும் கண்ணோ


வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்

ஜீவந‌தி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர  தூது விடும் கண்ணோ


மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற

வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே
வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே

நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர  தூது விடும் கண்ணோ


சேலை சோலையே பருவ சுகம் தேடும் மாலையே
சேலை சோலையே பருவ சுகம் தேடும் மாலையே

பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ

ராஜசுகம் தேடி வர  தூது விடும் கண்ணோ


Tuesday, July 27, 2010

Payanangal Mudivathillai - Ilaya Nila

படம் : பயணங்கள் முடிவதில்லை (1982)
இசை : இளையராஜா
பாடியவர் :  S.P. பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : வைரமுத்து


Image result for Payanangal Mudivathillai



இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே


இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே


இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே


வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்


வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்


வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்


இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே


முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ


முகிலினங்கள் அலைகிறதே 
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் 
அழுதிடுமோ அது மழையோ


நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்


இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே


இளைய நிலா பொழிகிறதே

Popular Posts