Showing posts with label Mohanlal. Show all posts
Showing posts with label Mohanlal. Show all posts

Sunday, September 16, 2018

Iruvar - Kannai Katti

படம்: இருவர் (1997)
இசை: A.R. ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன்
பாடல்வரிகள்: வைரமுத்து





வி டு த லை வி டு த லை 
வி டு த லை... விடுதலை
வி டு த லை... விடுதலை
வி டு த லை... விடுதலை
வி டு த லை... விடுதலை

கண்ணை கட்டி கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கை குயிலாய் ஆகாதே தோழா
தாடிகள் எல்லாம் தாகூரா
மீசைகள் எல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
நம் மடியினில் கணம் இல்லையே... பயம் இல்லையே
மனம்தனில் கறை இல்லையே... குறை இல்லையே
நினைத்தது முடியும் வரை ஹே ஹே ஹே ஹேய்

கண்ணை கட்டி கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கை குயிலாய் ஆகாதே தோழா
தாடிகள் எல்லாம் தாகூரா
மீசைகள் எல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா

வி டு த லை... விடுதலை 
வி டு த லை... விடுதலை
வி டு த லை... விடுதலை 
வி டு த லை... விடுதலை
தோழா... தோழா... லாலாலலலாலல
தோழா... தோழா... லாலாலலலாலல


மக்கள் மக்கள் என் பக்கம்
மாலை தென்றல் என் பக்கம்
சிட்டு குருவிகள் என் பக்கம்
செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழை தமிழர் என் பக்கம்
என்றும் தாய்குலம் என் பக்கம்
எட்டு திசையும் என் பக்கம் அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தி எடுப்பான்
வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கம் தான் இணைந்து விட்டால்
கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்

கண்ணை கட்டி... கொள்ளாதே
கண்டதையெல்லாம்... நம்பாதே
காக்கை குயிலாய் ஆகாதே தோழா
தாடிகள் எல்லாம் தாகூரா
மீசைகள் எல்லாம் பாரதியா
வேஷத்தில் நீ ஏமாறாதே தோழா


வெளியே போ சொல்லாதே
நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்க காசை வீசுவதால்
தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம்
விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள்சக்தி காசுக்கு வளையாது அட பணியாது
விடிவெள்ளி தான் முளைக்கும் வரை
இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்கு முகம் வெளுத்து விட்டால்
இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு

கண்ணை கட்டி கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கை குயிலாய் ஆகாதே தோழா
தாடிகள் எல்லாம் தாகூரா
மீசைகள் எல்லாம் பாரதியா
வேஷத்தில் நீ ஏமாறாதே தோழா
நம் மடியினில் கணம் இல்லையே... பயம் இல்லையே
மனம்தனில் கறை இல்லையே... குறை இல்லையே
நினைத்தது முடியும் வரை ஹே ஹே ஹே ஹேய்

Iruvar - Aayirathil Naan

படம்: இருவர் (1997)
இசை: A.R. ரஹ்மான்
பாடியவர்கள்: மனோ
பாடல்வரிகள்: வைரமுத்து




ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்
நான் நினைத்தால் நினைத்தது நடக்கும்
நடந்த பின் ஏழையின் பூமுகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்
இந்த உலகம் கதவடைத்தால்
எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து விட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்
ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்


அரசனாகட்டுமே அரசியாகட்டுமே
குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக்கேட்டு தடுப்பேன்
தர்மத்தின் பக்கம் இருப்பேன்
நெற்றியின் வேர்வை துளி நிலத்தில் வீழ்வதற்குள்
உழைத்த மக்களுக்கு கூலி வாங்கிக் கொடுப்பேன்
உண்மைக்கு காவல் இருப்பேன்
இந்த உலகம் கதவடைத்தால்
எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துனிந்து விட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்

ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்


புரட்சி மலரட்டுமே புன்னகை தவழட்டுமே
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு சூரியன் 
சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே
வாழ்க்கை விடியட்டுமே வறுமை ஒழியட்டுமே
உழைக்கும் மக்களுக்கு உலகங்கள் சொந்தம் 
உண்மைகள் தெளியட்டுமே
இனி எழுஞாயிறு எழுக
அந்த இருள் கூட்டங்கள் வ‌ழிக
பழைய பகை படையெடுத்தால்
கத்தி புத்தி ரெண்டும் கொண்டு வென்றுவிடுக

ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்
நான் நினைத்தால் நினைத்தது நடக்கும்
நடந்த பின் ஏழையின் பூமுகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்
இந்த உலகம் கதவடைத்தால்
எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து விட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்

Iruvar - Narumugaye Narumugaye

படம்: இருவர் (1997)
இசை: A.R ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ
பாடல்வரிகள்: வைரமுத்து




நறுமுகையே நறுமுகையே 
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து 
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் 
நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில் 
நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா

திருமகனே திருமகனே 
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் 
கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா


மங்கை மான்விழி அம்புகள் 
என் மார்துளைத்ததென்ன
மங்கை மான்விழி அம்புகள் 
என் மார்துளைத்ததென்ன

பாண்டி நாடனைக் கண்டு 
என் மனம் பசலை கொண்டதென்ன

நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்

இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் மேகலை இருக்கவில்லை

நறுமுகையே நறுமுகையே 
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து 
நீயொரு திருமொழி சொல்லாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில் 
கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா

அற்றைத் திங்கள் அந்நிலவில் 
நெற்றித்தரள நீர்வடிய 
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா


யாயும் யாயும் யாராகியரோ
நெஞ்சில் நேர்ந்ததென்ன
யாயும் யாயும் யாராகியரோ
நெஞ்சில் நேர்ந்ததென்ன

யானும் நீயும் எவ்வழியறிதும் 
உறவு சேர்ந்ததென்ன

ஒரே ஒரு தீண்டல் செய்தாய் 
உயிர்க்கொடி பூத்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் 
உயிர்க்கொடி பூத்ததென்ன

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் 
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

Popular Posts