Showing posts with label KamalHasan. Show all posts
Showing posts with label KamalHasan. Show all posts

Sunday, July 8, 2018

Guna - Unnai Naan

ப‌டம் : குணா (1991)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.ஜானகி
பாடல்வரிகள் : வாலி




உன்னை நான் அறிவேன் 
என்னை அன்றி யார் அறிவார் 
கண்ணில் நீர் வழிந்தால் 
என்னை அன்றி யார் துடைப்பார்
யார் இவர்கள் மாயும் மானிடர்கள் 
ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் 
உன்னை நான் அறிவேன் 
என்னை அன்றி யார் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால் 
என்னை அன்றி யார் துடைப்பார்


தேவன் என்றால் தேவன் அல்ல 
தரை மேல் உந்தன் ஜனனம் 
ஜீவன் என்றால் ஜீவன் அல்ல 
என்னைப் போல் இல்லை சலனம் 
நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை 
நானோ யாரும் வந்து தங்கிச் செல்லும் மாளிகை 
ஏன் தான் பிறந்தாயோ இங்கே வளர்ந்தாயோ 
காற்றில் நீ ஏன் சேற்றின் வாடைக் கொள்ள வேண்டும் 

உன்னை நான் அறிவேன் 
என்னை அன்றி யார் அறிவார் 
கண்ணில் நீர் வழிந்தால் 
என்னை அன்றி யார் துடைப்பார்

Sunday, March 31, 2013

Sigappu Rojakkal - Ninaivo Oru Paravai

படம் : சிகப்பு ரோஜாக்கள் (1978)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கமல்ஹாசன், S. ஜானகி
பாடல்வரிகள் : வாலி





ம்ம்... ம்ம் ம்ம்... ம்ம்... ம்ம் ம்ம்....
ம்ம் ம்ம்... ம்ம் ம்ம்.... ம்ம்
லா லா லல லா லா லல லா ஆ ஆ ஆ


நினைவோ ஒரு பறவை

பா... ப பப்ப பப்ப...

விரிக்கும் அதன் சிறகை

பா... ப ப ப ப... பா... ப ப ப ப ப... பா பா... பா பா...

பறக்கும் அது கலக்கும் தன் உறவை


நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை



ரோஜாக்களில் பன்னீர்த்துளி
வழிகின்றதேன் அது என்ன தேன்

அதுவல்லவோ பருகாத தேன்
அது இன்னும் நீ பருகாததேன்

அதற்காக தான் அலைபாய்கிறேன்

தந்தேன்... தர வந்தேன்


நினைவோ ஒரு பறவை

பா... ப பப்ப பப்ப...

விரிக்கும் அதன் சிறகை

பா... ப ப ப ப... பா... ப ப ப ப ப... பா பா... பா பா...

பறக்கும் அது கலக்கும் தன் உறவை

நினைவோ ஒரு பறவை



பனிக்காலத்தில் நான் வாடினால்
உன் பார்வை தான் என் போர்வையோ

அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்காக தான் மடிசாய்கிறேன்

மடி என்ன உன் மணி ஊஞ்சலோ

நீ தான்.... இனி நான் தான்



நினைவோ ஒரு பறவை

பா... ப பப்ப பப்ப...

விரிக்கும் அதன் சிறகை

பா... ப ப ப ப... பா... ப ப ப ப ப... பா பா... பா பா...

பறக்கும் அது கலக்கும் தன் உறவை


நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

நினைவோ ஒரு பறவை


Friday, February 15, 2013

விஸ்வரூபம் - உன்னை காணாது

படம் : விஸ்வரூபம் (2013)
இசை : ஷங்கர் – எஷான் - லோய்
பாடியவர்கள் : கமல்ஹாசன், ஷங்கர் மகாதேவன்
பாடல்வரிகள் : கமல்ஹாசன்






தக தக தக.... தின தின தின...
நக நக நக.... திகிட தான தான தான...
திக்கிட திக்கிட தகின்ன தான...
தாகுடு தான...
திக்கிட்டு தாக்கத்தா தி தி தி
தாணு தாணு கேந்தாணன்
தாணு தாணு கேந்தாணன்
தாணு தாணு கேந்தாணன்
அதிநவநீத அபிநயராஜா...
கோகுலபால கோடிப்ரகஷா...
விரகனரக ஸ்ரீரட்சக மாலா...
எத்தனைமுறை நான்ஏங்கி சாவேன்
இத்தவனை என்னை ஆட்கொல்வாயா
சூடிய வாடலை சூடிய வாகள
வாடிய சிந்தைக்கு திரும்பதா
பூதகியாக பணிதிடுவாயா
பாவை விரகம் பருகிடுவாயா
ஆயர்தம் ஆயா நீ வா

ஆயா... மாயா...

ஆயர்தம் ஆயா நீ வா

ஆயா... மாயா...

ஆயர்தம் ஆயா நீ வா

ஆயா... மாயா... வா…

உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா ..... கிருஷ்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
கமதநிஸ நித பம கம ரிகரிஸ
உன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே

நளினி மோகண சியாமள ரங்கா

திம் திம் திர திண்ணா

நடன பாவ ஸ்ருதிலய கங்கா

திடுகிட திம் திர திண்ணா

சரிவர தூங்காது வாடும்
அனுதினமும் உனக்காக ஏங்கும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்

கிடுத கிடு திம்... கிடுத கிடு திம்
தடுகிட... த.... தடுகிட....த
தடுகிடத தடுகிடத தடுகிடத.... தக் தக் த

ம்ம்..ம்ம்ம்.. ம்ம்ம்

அவ்வாறே நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திக்கைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன்
எதிர்பாராமலே அவன்
ஒ... பின் இருந்து வந்து எனை... தகிட தின்
பம்பரமாக சுழற்றி விட்டு
உலகுண்ட பெரு வாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி

உடலணிந்த ஆடை போல் எனை அணிந்து கொள்வாயா
இனி நீ... இனி நீ...
கண்ணா தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன் தான்
இனி நீ.... இனி நீ...
இது நேராமலே நான் உன்னை பாராமலே நான்
இந்த முழுஜென்மம் போயிருந்தால்
என்று அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா

தகதக தகதிம் தகதக தகதிம்
தகதக திம் தகதக திம்  தக திம் தக திம்
தோங் தோங் தகதக திம்
தகதிம் திரிங்கிட தோம் தகதரிகட

தகதரிகட தகதரிகட தகதரிகட
தகதரிகட தகதரிகட தகதரிகட 
ராஜா ராஜா ராம்

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா
காமக் கலைஞன் கண்ணா
கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

Thursday, February 14, 2013

Guna - Kanmani Anbodu

படம் : குணா (1991)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கமல்ஹாசன், S. ஜானகி
பாடல்வரிகள் : வாலி







கண்மணி அன்போடகாதலன் நான்... நான்...
நான்.... ம்...
எழுதும் கடிதம் லெட்டர் சே... 
கடுதாசி இல்ல கடிதமே இருக்கட்டும்
கடிதம்.... படி

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

பாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும், ம்
மொதல்ல கண்மணி சொன்னேல்ல
இங்க பொன்மணி போட்டுக்க
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா
நான் இங்க சௌக்கியம்

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே

ஆ... உன்னை நெனச்சி பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா 
இந்த எழுத்துதான் வார்த்த 

உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது 

அதான் 

அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

அதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை படி 

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே 
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....

ஓஹோ... கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே 

லலல... லலல... லலல... லல...

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே

லலல... லலல... லலல... லல...



ம்... எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை
இதயும் எழுதிக்க நடுவுல நடுவுல
மானே! தேனே! பொன் மானே! இதுல்லாம் போட்டுக்கனும்
இத பாரு... எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா...தாங்காது
அபிராமி... அபிராமி அபிராமி...

அதையும் எழுதணுமா

இது காதல்
என் காதல் என்னன்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ 
அப்படின்னு நினைககும் போது வர்ற அழுகை கூட நின்னுடுது
ஹா ஹா மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது

உண்டான காயம் இங்கு தன்னாலே ஆறிப்போன
மாயமென்ன பொன் மானே பொன் மானே
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே.....
எந்தன் காதல் என்னெவென்று
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
என்றென்னும் போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது

அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்குப் புரியுமா
சுப லாலி லாலியே லாலி லாலியே
அபிராமி லாலியே லாலி லாலியே
அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா
உனக்கு புரியுமா...

லலல... லலல... லலல... லல...

லலல... லலல... லலல... லல...

லலல... லலல... லலல... லல...

லலல... லலல... லலல... லல...

ஒஹோ லலல... லலல... லலல... லல...
லலல... லலல... லலல... லல...
லலல... லலல... லலல... லல...
லலல... லலல... லலல... லல...


Saturday, December 8, 2012

பஞ்ச தந்திரம் - காதல் பிரியாமல்


படம் : பஞ்ச தந்திரம் (2002)
இசை : தேவா
பாடியவர்கள் : கமலஹாசன்
பாடல்வரிகள்: வைரமுத்து





காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே
என்னை கவியாய் செய்வாயா
இல்லை கனியாய் செய்வாயா
பழி போடும் பாவையே


நாயகி என்னை நீங்கியதாலே
வீடு வெறிச்சோடி போச்சு
நாற்புறம் கண்ணீர் சூழ்ந்ததனாலே
கட்டில் தீவாக ஆச்சு
மணமாகும் முன்பு கண்ணன் நானே
மணமான பின்பு ராமன் தானே
அடி சீதை நீ சொன்னால்
இந்த ராமன் தீ குளிப்பேன்
இல்லை காற்றில் உயிர் கலப்பேன்


காண்பவை எல்லாம் பிழை என்று கொண்டால்
வாழ முடியாது பெண்ணே
கயிருகள் எல்லாம் பாம்பென கண்டால்
கண்கள் உறங்காது கண்ணே
என் போர்வையோடு உந்தன் வெப்பம்
என் கண்களோடு கண்ணீர் தெப்பம்
அலையோடு தண்ணீர் நிற்குமா
உயிர் நீங்கி உடல் நிற்குமா
உந்தன் ஊடல் தீருமா…ஆ…ஆ…ஆ

காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே
என்னை கவியாய் செய்வாயா
இல்லை கனியாய் செய்வாயா
பழி போடும் பாவையே

Friday, December 7, 2012

விருமாண்டி - உன்ன விட


படம் : விருமாண்டி (2004)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கமலஹாசன், ஸ்ரேயா கோஷல்
பாடல்வரிகள்: கமலஹாசன்






உன்ன விட.... இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை

உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை  ஒன்னும் இல்லை

உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை யாருமில்லை

வாக்கபட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி
சாதி சனம் எல்லாம் அவன்தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
என்ன விட உன்ன சரிவர புரிஞ்சிக்க
ஆருமில்லை எவளுமில்லை

உன்ன விட…..

என்ன விட……..


அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் குளத்து கொடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலபாயுது

நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்ம பார்த்து ஜோடி சேருது
சேர்த்து வைச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது

என்ன புது தாகம் அனலாகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
காணாக்கனா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா….

உன்ன விட…

காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கு அது கோயில் மணி
ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி
போத்திக்கிற நமக்கு அது மூடு துணி

உன்ன விட……


உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு சென்மம் வேணும் அத கேட்குறேன் சாமிய

என்ன கேட்குற சாமிய?

நூறு சென்மம் உன் கூட

போதுமா?
நூறு சென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

காத்தா அலைஞ்சாலும்
கடலாக நீ இருந்தாலும்

ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்

உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை  ஒன்னும் இல்லை

உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை எவளுமில்லை
வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி
வாழ்த்து சொல்ல சந்திரன் வருவான்டி

சாதி சனம் எல்லாம் அவன்தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி


உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை யாருமில்லை


என்னை விட …

உன்னை விட …

Popular Posts