படம் : பஞ்ச தந்திரம் (2002)
இசை : தேவா
பாடியவர்கள் : கமலஹாசன்
பாடல்வரிகள்: வைரமுத்து
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே
என்னை கவியாய் செய்வாயா
இல்லை கனியாய் செய்வாயா
பழி போடும் பாவையே
நாயகி என்னை நீங்கியதாலே
வீடு வெறிச்சோடி போச்சு
நாற்புறம் கண்ணீர் சூழ்ந்ததனாலே
கட்டில் தீவாக ஆச்சு
மணமாகும் முன்பு கண்ணன் நானே
மணமான பின்பு ராமன் தானே
அடி சீதை நீ சொன்னால்
இந்த ராமன் தீ குளிப்பேன்
இல்லை காற்றில் உயிர் கலப்பேன்
காண்பவை எல்லாம் பிழை என்று கொண்டால்
வாழ முடியாது பெண்ணே
கயிருகள் எல்லாம் பாம்பென கண்டால்
கண்கள் உறங்காது கண்ணே
என் போர்வையோடு உந்தன் வெப்பம்
என் கண்களோடு கண்ணீர் தெப்பம்
அலையோடு தண்ணீர் நிற்குமா
உயிர் நீங்கி உடல் நிற்குமா
உந்தன் ஊடல் தீருமா…ஆ…ஆ…ஆ
காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே
என்னை கவியாய் செய்வாயா
இல்லை கனியாய் செய்வாயா
பழி போடும் பாவையே