Showing posts with label Jiju. Show all posts
Showing posts with label Jiju. Show all posts

Tuesday, October 23, 2012

Ninaivellam Nithya - Rojavai Thalattum

படம் : நினைவெல்லாம் நித்யா (1982)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P. பாலசுப்பிரமணியம், S.ஜானகி
பாடலாசிரியர் : வைரமுத்து

Image result for Ninaivellam Nithya

ஆ...  ஆ...  ஆ...
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

உன் கூந்தல் என் ஊஞ்சல்

உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா...
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை

விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை

மௌனமே சம்மதம் என்று ...

தீண்டுதே மன்மத வண்டு ...
மௌனமே சம்மதம் என்று 
தீண்டுதே மன்மத வண்டு 
பார்த்தாலே தள்ளாடும் பூஞ்செண்டு

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்

பொன் மேகம் நம் பந்தல்

உன் கூந்தல் என் ஊஞ்சல்

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்

இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்

பூவிலே மெத்தைகள் தைப்பேன் ...

கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் ....
பூவிலே மெத்தைகள் தைப்பேன் 
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் 
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஹா... ஹா...

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்

பொன் மேகம் நம் பந்தல்

உன் கூந்தல் என் ஊஞ்சல்

உன் வார்த்தை சங்கீதங்கள் 

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

Wednesday, May 16, 2012

Ninaivellam nithya - Nee Thane Enthan

படம் : நினைவெல்லாம் நித்யா (1982)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P. பால சுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வைரமுத்து

Image result for Ninaivellam Nithya

நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஆஹா... நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே... வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே... அரங்கேறும் கண்ணோரம்
நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

பாதை முழுதும்... கோடி மலர்கள்...
பாடி வருமே... தேவக் குயில்கள்...
உன் ஆடை ஹே... மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே... குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் வீசும் மொழிகளில் பிறையும் பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும்
நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
என் வாசல் ஹே... வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே... அரங்கேரும் கண்ணோரம்

ஈர இரவில்... நூறு கனவு...
பேதை விழியில்... போதை நினைவு...
பன்னீரில் ஹே... இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே... உனைக்கண்டு தேனூரும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வை துளியது போகும் வரையினில் தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும்

நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
என் வாசல் ஹே... வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே... அரங்கேரும் கண்ணோரம்
ம்... ம்.. ம்.... ம்... ஹா... ஹா...ஹா... ஹா...

Sunday, August 29, 2010

Ninaivellam Nithya - Pani Vizhum

படம் : நினைவெல்லாம் நித்யா (1982)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P. பால சுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வைரமுத்து

Image result for Ninaivellam Nithya

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை.......... ஒரு வரம்.....

இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... ஏ..... ஹே.....
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்

சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை
சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை

இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடும்.. ஏ..... ஹே.....

இளமையின் கனவுகள் விழியோரம் துளிர் விடும்
கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே... ஏ..... ஹே.....

வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை.......... ஒரு வரம்.....

இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... ஏ..... ஹே.....
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

பனி விழும் மலர் வனம்.. பனி விழும் மலர் வனம்..
பனி விழும் மலர் வனம்.

Popular Posts