Showing posts with label J. Show all posts
Showing posts with label J. Show all posts

Tuesday, September 6, 2011

ஜோடி - ஒரு பொய்யாவது


படம் : ஜோடி (1999)
இசை: A.R. ரஹ்மான்
பாடியவர் : ஹரிஹரன்
பாடல் வரி : வைரமுத்து








ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில்..... உயிர் வாழ்வேன்


ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்


பூக்களின் முன்னால் சத்தம்
அடி மெளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம் தான்
ரொம்பப் பக்கம் பக்கம் தான்
பார்த்தால் ரெண்டும் ஒன்று தான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்று தான்
பார்க்கும் கண்கள் ஒன்று தான்
உண்டால் ரெண்டும் வேறு தான்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்


இரவினைத் திரட்டி... யி..யி..... ஓ.....
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டி கண்கள் செய்தாரோ...
விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கை ரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு
தங்கம் தங்கம் பூசி தோல் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்


அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
நான் உயிர் வாழ்வேன்... உயிர் வாழ்வேன்...
அந்த ஒரு சொல்லில்... அந்த ஒரு சொல்லில்...

அந்த ஒரு சொல்லில்... அந்த ஒரு சொல்லில்...

சொல்லில் அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்... உயிர் வாழ்வேன்...
உயிர் வாழ்வேன்...

Sunday, April 17, 2011

ஜீன்ஸ் - அன்பே அன்பே



படம் : ஜீன்ஸ் (1998)
இசை : A.R. ரஹ்மான்

பாடியவர் : 
 ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்
பாடல் வரி :  
வைரமுத்து









அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே


அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே


பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீ தான் நீ தான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி


அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே


கொடுத்து வைத்த பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்த சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்த கொலுசே
காலளவைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே 
மாரழகை சொல்வாயா


அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிராய் உறையிடுவேன்


மேகத்தைத் திணித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மார்பில் வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளியெல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளி
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்


அன்பே அன்பே கொல்லாதே.....


அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே

Tuesday, July 27, 2010

Johnny - En Vaanile

படம் : ஜானி (1980)
இசை : இளையராஜா
பாடியவர் :  ஜென்சி
பாடல் வரி : கண்ணதாசன்






என் வானிலே ஒரே வெண்ணிலா
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்....
என் வானிலே ஒரே வெண்ணிலா


நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா... ஆ....ஆ....ஆ....


என் வானிலே ஒரே வெண்ணிலா


நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா... ஆ....ஆ....ஆ....


என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்....


என் வானிலே ஒரே வெண்ணிலா

Popular Posts