Showing posts with label Hrithik Roshan. Show all posts
Showing posts with label Hrithik Roshan. Show all posts

Tuesday, August 6, 2013

Jodha Akbar - Ithayam Idam Mariyathe

படம் : ஜோதா அக்பர் (2008)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் : கார்த்திக், K.S.சித்ரா

பாடல்வரிகள்: நா.முத்துகுமார்






இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே

இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே
இந்த பூமி முழுவதும் அழகாய் மாறி போனதேனோ
என் வானின் மீது புதிதாய் ஒரு மேகம் மிதப்பதேனோ
மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புதுவித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
ஓஓ... மனமே மனமே எதனால் இத்தனை கொண்டாட்டம்
கண்ணுக்குள்ளே கனவுகள் குடியேற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ


செஞ்சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ

அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ

செஞ்சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ 

அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ
காலம் என்னும் நதியில் விழுந்து  இரவும் நகர்ந்தது
பகலும் நகர்ந்தது  இதயமும் நகர்ந்தது ஓ....

இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே

இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே


அலை பாயும் காதலே அணையாத தீயா

வலித்தாலும் காதலே இனிக்கின்ற நோயா
இசையோடு சேரும் தாளம் சுதியோடு பாடும் ராகம்
அதைப் போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே
உள்ளம் சாய்ந்ததே காதலின் கால் தடம் தந்ததும் தீயா
தந்ததும் தீயா தீயை தொட்டு இரசித்தாய் வந்ததும் நீயா

ம்ம்... எந்தன் கனவில் ஒர் பூந்தோட்டம்

பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே
பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம்
பூவின் வாசம் எல்லாமே உன் சொந்தமே

புது யுகமோ பிறந்ததோ பரிமாற்றம் நிகழ்ந்ததோ

இரு துருவம் இணைந்ததோ இரு விழிகள் தொலைந்ததோ
புது யுகமோ பிறந்ததோ பரிமாற்றம் நிகழ்ந்ததோ
இரு துருவம் இணைந்ததோ இரு விழிகள் தொலைந்ததோ
காலம் என்னும் நதியில் விழுந்து இரவும் நகர்ந்தது
பகலும் நகர்ந்தது இதயம் நகர்ந்தது ஓ....

இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே
இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே
மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புதுவித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ



Wednesday, May 15, 2013

Jodha Akbar - Mulumathy

படம் : ஜோதா அக்பர் (2008)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் : ஸ்ரீநிவாஸ்






முழுமதி அவளது முகமாகும்

மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஓ... ஹோ... முழுமதி அவளது முகமாகும்

மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்


கால் தடமே பதியாத கடல்தீவு அவள்தானே

அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

ஓ... ஹோ... முழுமதி அவளது முகமாகும்

மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்


அமைதியுடன் அவள் வந்தாள் விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்

பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம் தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமோ

ஓ... ஹோ... முழுமதி அவளது முகமாகும்

மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்



Popular Posts