Showing posts with label Genelia. Show all posts
Showing posts with label Genelia. Show all posts

Friday, April 20, 2012

வேலாயுதம் - மாயம் செய்தாயோ




படம்: வேலாயுதம் (2011)
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்: சங்கீதா ராஜேஸ்வரன் 
பாடல் வரி: கபிலன்











மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ

ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ.... ஹோ....


ஒ..ஒ....... ஒ......ஒ......
நாண செடி வளரும் தோட்டம் ஆனேன்

யானை வந்து போன சோலை ஆனேன்
காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
மின் சிரி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன்
என் பெயரை நான் மறந்து கல் போல கிடந்தேன்
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ




வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்
அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
மீசை முடி கரிய அருகம் புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உன் அருகில் முட்செடியும் அழகாக தெரியும்
உன் எதிரில் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை


மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..

ஹோ.. ஹோ..ஒ.. ஹோ ஒ ஹோ



Wednesday, April 6, 2011

சந்தோஷ் சுப்பிரமணியம் - எப்படி இருந்த




படம் : சந்தோஷ் சுப்பிரமணியம் (2008)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்

பாடியவர் : 
திப்பு, கோபிகா பூர்ணிமா
பாடல் வரி :  விவேகா


எப்படி இருந்த எம் மனசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா


எப்படி இருந்த என் வயசு
அட இப்படி மாறிப் போகிறது
உன் சொற்களில் என்ன சர்க்கரை இருக்கிறதா


உனது சிரிப்பின் ஒலியில் எனது இளமை தவிக்கிறதே


அலையும் உனது விழியை பார்த்தால் பயமாய் இருக்கிறதே


அரிது அரிது இளமை அரிது 
விலகிப் போனால் நியாயமா
மழை வருதே மழை வருதே 
விழி மேகம் ஆகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே 
உன் சுவாசம் வீசும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது


ஹே.. எப்படி இருந்த எம் மனசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா


எப்படி இருந்த என் வயசு
அட இப்படி மாறிப் போகிறது
உன் சொற்களில் என்ன சர்க்கரை இருக்கிறதா




ஏ.. சொட்டு சொட்டு தேனா 
நீ நெஞ்சில் விட்டுப் போனா
ஏங்குதே என் மனம் துள்ளி துள்ளி தானா


கிட்ட கிட்ட வேணாம் 
ஹே.. தில்லு முல்லு வேணாம்
தொட்டதும் பால்குடம் கெட்டுப் போகும் வீணா


அழகு என்பதே பருகத்தானடி எனது ஆசைகள் தப்பா


நெருங்கும் காலம் தான் நெருங்கும் நாள் வரை
நினைத்து கொள்ளு நீ நட்பா


இரவோ பகலோ கனவோ நிஜமோ 
எதிலும் நீயே தானடி
மழை வருதே மழை வருதே 
விழி மேகம் ஆகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே 
உன் சுவாசம் வீசும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது




கிட்ட வந்து நின்னா 
அது குற்றம் என்று சொன்னா
ஏனடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணா


கொக்கு வந்து போனா 
அட நெஞ்சை சொல்லும் தானா
சிக்கிட நானொரு புத்தி கெட்ட மீனா


முறுக்க போலவே இருக்கும் காதுகள்
கடிக்கத் தூண்டுதே அன்பே


துடுப்பு போலவே இருக்கும் கைகளால்
அடிக்கத் தோன்றுதே அன்பே


நடையோ உடையோ ஜடையோ இடையோ 
எதுவோ என்னைத் தாக்குதே
மழை வருதே மழை வருதே 
விழி மேகம் ஆகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே 
உன் சுவாசம் வீசும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது 

Wednesday, March 16, 2011

சந்தோஷ் சுப்பிரமணியம் - அடடா அடடா




படம் : சந்தோஷ் சுப்பிரமணியம் (2008)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்

பாடியவர் : 
சித்தார்த்
பாடல் வரி : நா.முத்துகுமார்




அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்


கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால் என் உயிரை கேட்கிறாய்


அடி உன் முகம் கண்டால் என் இமை ரெண்டும்
கைகள் தட்டுதே


அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்


நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டும் என்று
நெஞ்சம் ஏங்குதடி


வானவில்லாய் நீயும் வந்த போது
எந்தன் கருப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி


என் வீட்டு பூவெல்லாம் உன் வீட்டு திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம் எங்கேன கேட்குதடி


அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்


ஏய் வானம் மீது போகும் மேகம் எல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட 
கண்கள் மயங்குதடி


பூவில் ஆடும் பட்டாம்பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே பறந்து செல்லும் 
அழகை ரசிக்குதடி


உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள் தோறும் நான் சேர்க்கும்
ஞாபக சின்னங்கள்


அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்...

Friday, February 25, 2011

சந்தோஷ் சுப்பிரமணியம் - உயிரே உயிரே




படம் : சந்தோஷ் சுப்பிரமணியம் (2008)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்

பாடியவர் : 
சாகர்
பாடல் வரி : நா.முத்துகுமார்


உயிரே உயிரே பிரியாதே 
உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே ஒ ஹோ ஒ


கனவே கனவே கலையாதே 
கண்ணீர் துளியில் கரையாதே 
நீ இல்லாமல் இரவே விடியாதே ஒ ஹோ ஒ


பெண்ணே நீ வரும் முன்னே 
ஒரு பொம்மை போலே இருந்தேன் 
புன்னகையாலே முகவரி தந்தாயே ஒ ஒ ஒ


ஆயுள் முழுதும் அன்பே 
உன் அருகில் வாழ்ந்திட நினைதேன் 
அறை நொடி மின்னல் போலே சென்றாயே


உயிரே உயிரே பிரியாதே 
உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே ஒ ஹோ ஒ


புல் மேல் வாழும் 
பனி தான் காய்ந்தாலும் 
தலை மேல் தாங்கிய நேரம் 
கொஞ்சம் ஆனால் பொற்காலம்


உன் அருகாமை 
அதை நான் இழந்தாலும் 
சேர்ந்தே வாழ்ந்த 
ஒவ்வொரு நொடியின் 
நினைவே சந்தோஷம்


கடல் மூழ்கிய தீவுகளை 
கண் பார்வைகள் அறிவதில்லை 
அது போலே உன்னில் மூழ்கிவிட்டேன்


உயிரே உயிரே பிரியாதே 
உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே ஒ ஹோ ஒ


உன் கை கோர்த்து 
அடி நான் சென்ற இடம் 
தன்னந்தனியாய் எங்கே வந்தாய் 
என்றே கேட்கிறதே


உன் தோள் சாய்ந்து 
அடி நான் நின்ற மரம் 
நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு 
நெருப்பாய் எரிகிறதே


நிழல் நம்பிடும் என் தனிமை 
உடல் நம்பிடும் உன் பிரிவை 
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே


உயிரே உயிரே பிரியாதே 
உயிரை தூக்கி எறியாதே 
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே ஒ ஹோ ஒ


கனவே கனவே கலையாதே 
கண்ணீர்த் துளியில் கரையாதே 
நீ இல்லாமல் இரவே விடியாதே ஒ ஹோ ஒ

Wednesday, August 25, 2010

சச்சின் - கண் மூடி திறக்கும் போது



படம் :சச்சின் (2005)
இசை :தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர் :
தேவி ஸ்ரீபிரசாத் (D.S.P)

பாடல் வரி: நா.முத்துகுமார்

  


கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல.. 
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே.. 
குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிப் போகும் மழையைப் போல.. 
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே.. 
தெருமுனையை தாண்டும் வரையும்..வெறும் நாள் தான் என்றிருந்தேன்.. 
தேவதையை பார்த்ததும் இன்று..திருநாள் எங்கின்றேன்... 
அழகான விபத்தில் இன்று ஹய்யோ நான் மாட்டிக்கொண்டேன்.. 
தப்பிக்க வழிகள் இருந்தும் ம் வேண்டாம் என்றேன்... 

ஓஓஓஓஓஓ ஓஓஓஒஓஓஓ 

உன் பெயரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே.. 
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா.. 
நீ என்னைப் பார்க்காமல் நான் உன்னைப் பார்க்கின்றேன்.. 
நதியில் விழும் பின்பத்தை நிலா அறியுமா.. 
உயிருக்குள் ன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா.. 
இதயத்தில் மலையின் எடையை உணர்கின்றேன் காத்ல் இதுவா.. 


கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல.. 
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே.. 


வீதி உலா நீ வந்தால் தெரு விளக்கும் கண் அடிக்கும்... 
வீடு செல்ல சூரியெனும் அடம் பிடிக்குமே.. 
நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காய்ச்சல் வரும் 
உன்னை தொட்டுப் பார்க்கத்தான் மழை குதிக்குமே.. 
பூகம்பம் வந்தால் கூட ஓ ஓ பதறாது நெஞ்சம் எனது.. 
பூ ஒன்று மோதியதாலே ஓஒ பட்டென்று சரிந்தது இன்று.. 

கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல.. 
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே.. 



Popular Posts