Showing posts with label Gayathri. Show all posts
Showing posts with label Gayathri. Show all posts

Tuesday, October 23, 2018

Aranmanai Kili - Adi Punguyile

படம்: அரண்மனை கிளி  (1993)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, மின்மினி
பாடல்வரிகள்: வாலி

Image result for Aranmanai Kili



அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு 
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூலப்போல உன் உடம்பு ஆச்சு 

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு 
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூலப்போல உன் உடம்பு ஆச்சு 
வட்டமிட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாயவிட்டு போனதென்ன பேச்சு 

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு 


ஆத்தங்கரை அந்தப்புரம் ஆக்கிகொள்ளவா 
அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா 

மாமன் கையில் பூவை தந்து  சூடிக்கொள்ளவா 
அடி ஆசையென்னும் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொள்ளவா 

சொல்லு சொல்லு திட்டமென்ன சொல்லுவது கஷ்டமா 
பொத்தி பொத்தி வெச்சதென்ன என்னனவோ இஷ்டமா 

கூவாம கூவுறியே குக்கூ குக்கூ பாட்டு 
மாட்டாம மாட்டிப்புட்டா சொக்குபொடி போட்டு 

யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூலப்போல உன் உடம்பு ஆச்சு 

பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு


ஊரையெல்லாம் சுத்தி வந்த ஒத்தைக்கிளியே 
இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே 

சொந்தபந்தம் யாருமின்றி வந்த கிளியே 
ஒரு சொந்தம் இப்போ வந்ததேன்ன வாசல் வழியே 

வேருவிட்ட ஆலங்கன்னு வானம் தொடபாக்குது 
வானம் தொடும் ஆசையிலே மெல்ல மெல்லபூக்குது 

பூப்பூவா பூக்கவேச்ச மாமனவன் யாரு 
பாடுகிற பாட்டுலதான் நீயும் அத கூறு

Thursday, October 18, 2012

18 Vayasu - Podi Podi Penne


படம் : 18 வயசு (2012)
இசை : சார்லஸ் போஸ்கோ & தினேஷ்
பாடியவர் :  பென்னி தயாள்
பாடல் வரி : யுகபாரதி






போடி போடி பெண்ணே
நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன்
நீ தொலைத்து விட்டாய் என்னை
மானே என்று சொன்னேன்
நீ மார்பில் குத்தி சாய்த்தாய்
தேனே என்று சொன்னேன்
நீ தீயில் என்னைப் போட்டாய்
காதல் என்னும் நரகத்துக்குள்
என்னை மட்டும் தள்ளிப் போனாயே...

எனது நிழலாக நான் உன்னை நினைத்தேன்
விலகச் செய்தாயடி...
எனது உறவாக நான் உன்னை நினைத்தேன்
பிரிவை சொன்னாயடி...
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் தானடி
நீ பெண்ணில்லை பேயென்று சொல்வேனடி
நான் வாழ்வுக்கு வழி தேடி வந்தேனடி
நீ ஏன் என்னை பழி வாங்கிப் போனாயடி...
 
போடி போடி பெண்ணே
நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன்
நீ தொலைத்து விட்டாய் என்னை
மானே என்று சொன்னேன்
நீ மார்பில் குத்தி சாய்த்தாய்
தேனே என்று சொன்னென்
நீ தீயில் என்னைப் போட்டாய்
காதல் என்னும் நரகத்துக்குள்
என்னை மட்டும் தள்ளிப் போனாயே... ஏ... ஹே...

கடவுள் வரமாக நான் உன்னை ரசித்தேன்
சாபம் தந்தாயடி...
உயிரின் உயிராக நான் என்னைக் கொடுத்தேன்
சாகச் சொன்னாயடி...
என் ஆகாயம் நீ என்று இருந்தேனடி
நீ இடியாக என்னுள்ளே விழுந்தாயடி
என் பூலோகம் நீ என்று மலர்ந்தேனடி
நீ பூகம்பம் போல் வந்து தொலைத்தாயடி

போடி போடி பெண்ணே
நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன்
நீ தொலைத்து விட்டாய் என்னை
மானே என்று சொன்னேன்
நீ மார்பில் குத்தி சாய்த்தாய்
தேனே என்று சொன்னேன்
நீ தீயில் என்னைப் போட்டாய்
காதல் என்னும் நரகத்துக்குள்
என்னை மட்டும் தள்ளிப் போனாயே...

Wednesday, October 17, 2012

18 Vayasu - Unnai Ondru Naan


படம் : 18 வயசு (2012)
இசை : சார்லஸ் போஸ்கோ & தினேஷ்
பாடியவர் :  ஸ்ரீராம் பார்த்தசாரதி, சுதா ரகுநாதன்
பாடல் வரி : நா.முத்துகுமார்







உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
சின்ன பிள்ளை போலாகவா?
என்னை கொஞ்சம் தாலாட்டவா?
முதல் முறை மழை பார்த்த சிறு பிள்ளை போலே
மனம் இன்று கொண்டாடுதே
இது என்ன இருதயம் மிருதங்கம் போலே
இன்று புது பண் பாடுதே

உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
கையில் உன்னை நான் ஏந்தவா?
செல்லம் கொஞ்சி தாலாட்டவா?
முதல் முறை தாவணியில் நான் தெரிந்த நாளில்
மனம் இன்று சை போடுதே
பெண்மை கொண்ட நாணத்தின் பொருள் புரியும் வேலை
மௌனம் என்னை பந்தாடுதே

காதல் வந்தால் கண் பார்த்து பேசுவேதனோ
காமம் வந்தால் வேறெங்கோ பார்ப்பதும் ஏனோ

நதியில் பூ விழுந்தால் மேலே நீந்திடுமே
நதியில் கல் வழிந்தால் அது ஆழம் சென்றிடுமே

மயக்கம் வந்தால் அன்பே சொல் தயக்கங்கள் ஏனோ
தயக்கம் வந்தால் அங்கேயும் மயக்கங்கள் ஏனோ

உடலில் தீ விழுந்தால் உடனே அணைந்திடுமே
மனதில் தீ விழுந்தால் அது அணைத்தால் எழுந்திடுமே

உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
சின்ன பிள்ளை போலாகவா?
என்னை கொஞ்சம் தாலாட்டவா?

கூச்சம் வந்தால் அச்சங்கள் வருவது ஏனோ
அச்சம் இருத்தும் மச்சங்கள் மலர்வதும் ஏனோ

கைகள் தீண்டவந்தால் வளையல் தடுத்திடுமே
மீண்டும் தீண்டவந்தால் அது உடைந்திட துடித்திடுமே

ஏக்கம் வந்தால் எல்லாமும் புரிவதும் ஏனோ
எல்லாம் துலைந்தும் என் நெஞ்சம் தேடுவதனோ

ஆ... துளைவது எல்லாமே மீண்டும் கிடைத்திடதான்
கிடைப்பது எல்லாமே நாம் மீண்டும் துளைத்திடதான்

உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
சின்ன பிள்ளை போலாகவா?
என்னை கொஞ்சம் தாலாட்டவா?
முதல் முறை மழை பார்த்த சிறு பிள்ளை போலே
மனம் இன்று கொண்டாடுதே
இது என்ன இருதயம் மிருதங்கம் போலே
இன்று புது பண் பாடுதே

Popular Posts