Showing posts with label Charles Bosco - Dinesh. Show all posts
Showing posts with label Charles Bosco - Dinesh. Show all posts

Thursday, October 18, 2012

18 Vayasu - Podi Podi Penne


படம் : 18 வயசு (2012)
இசை : சார்லஸ் போஸ்கோ & தினேஷ்
பாடியவர் :  பென்னி தயாள்
பாடல் வரி : யுகபாரதி






போடி போடி பெண்ணே
நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன்
நீ தொலைத்து விட்டாய் என்னை
மானே என்று சொன்னேன்
நீ மார்பில் குத்தி சாய்த்தாய்
தேனே என்று சொன்னேன்
நீ தீயில் என்னைப் போட்டாய்
காதல் என்னும் நரகத்துக்குள்
என்னை மட்டும் தள்ளிப் போனாயே...

எனது நிழலாக நான் உன்னை நினைத்தேன்
விலகச் செய்தாயடி...
எனது உறவாக நான் உன்னை நினைத்தேன்
பிரிவை சொன்னாயடி...
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் தானடி
நீ பெண்ணில்லை பேயென்று சொல்வேனடி
நான் வாழ்வுக்கு வழி தேடி வந்தேனடி
நீ ஏன் என்னை பழி வாங்கிப் போனாயடி...
 
போடி போடி பெண்ணே
நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன்
நீ தொலைத்து விட்டாய் என்னை
மானே என்று சொன்னேன்
நீ மார்பில் குத்தி சாய்த்தாய்
தேனே என்று சொன்னென்
நீ தீயில் என்னைப் போட்டாய்
காதல் என்னும் நரகத்துக்குள்
என்னை மட்டும் தள்ளிப் போனாயே... ஏ... ஹே...

கடவுள் வரமாக நான் உன்னை ரசித்தேன்
சாபம் தந்தாயடி...
உயிரின் உயிராக நான் என்னைக் கொடுத்தேன்
சாகச் சொன்னாயடி...
என் ஆகாயம் நீ என்று இருந்தேனடி
நீ இடியாக என்னுள்ளே விழுந்தாயடி
என் பூலோகம் நீ என்று மலர்ந்தேனடி
நீ பூகம்பம் போல் வந்து தொலைத்தாயடி

போடி போடி பெண்ணே
நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன்
நீ தொலைத்து விட்டாய் என்னை
மானே என்று சொன்னேன்
நீ மார்பில் குத்தி சாய்த்தாய்
தேனே என்று சொன்னேன்
நீ தீயில் என்னைப் போட்டாய்
காதல் என்னும் நரகத்துக்குள்
என்னை மட்டும் தள்ளிப் போனாயே...

Wednesday, October 17, 2012

18 Vayasu - Unnai Ondru Naan


படம் : 18 வயசு (2012)
இசை : சார்லஸ் போஸ்கோ & தினேஷ்
பாடியவர் :  ஸ்ரீராம் பார்த்தசாரதி, சுதா ரகுநாதன்
பாடல் வரி : நா.முத்துகுமார்







உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
சின்ன பிள்ளை போலாகவா?
என்னை கொஞ்சம் தாலாட்டவா?
முதல் முறை மழை பார்த்த சிறு பிள்ளை போலே
மனம் இன்று கொண்டாடுதே
இது என்ன இருதயம் மிருதங்கம் போலே
இன்று புது பண் பாடுதே

உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
கையில் உன்னை நான் ஏந்தவா?
செல்லம் கொஞ்சி தாலாட்டவா?
முதல் முறை தாவணியில் நான் தெரிந்த நாளில்
மனம் இன்று சை போடுதே
பெண்மை கொண்ட நாணத்தின் பொருள் புரியும் வேலை
மௌனம் என்னை பந்தாடுதே

காதல் வந்தால் கண் பார்த்து பேசுவேதனோ
காமம் வந்தால் வேறெங்கோ பார்ப்பதும் ஏனோ

நதியில் பூ விழுந்தால் மேலே நீந்திடுமே
நதியில் கல் வழிந்தால் அது ஆழம் சென்றிடுமே

மயக்கம் வந்தால் அன்பே சொல் தயக்கங்கள் ஏனோ
தயக்கம் வந்தால் அங்கேயும் மயக்கங்கள் ஏனோ

உடலில் தீ விழுந்தால் உடனே அணைந்திடுமே
மனதில் தீ விழுந்தால் அது அணைத்தால் எழுந்திடுமே

உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
சின்ன பிள்ளை போலாகவா?
என்னை கொஞ்சம் தாலாட்டவா?

கூச்சம் வந்தால் அச்சங்கள் வருவது ஏனோ
அச்சம் இருத்தும் மச்சங்கள் மலர்வதும் ஏனோ

கைகள் தீண்டவந்தால் வளையல் தடுத்திடுமே
மீண்டும் தீண்டவந்தால் அது உடைந்திட துடித்திடுமே

ஏக்கம் வந்தால் எல்லாமும் புரிவதும் ஏனோ
எல்லாம் துலைந்தும் என் நெஞ்சம் தேடுவதனோ

ஆ... துளைவது எல்லாமே மீண்டும் கிடைத்திடதான்
கிடைப்பது எல்லாமே நாம் மீண்டும் துளைத்திடதான்

உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
சின்ன பிள்ளை போலாகவா?
என்னை கொஞ்சம் தாலாட்டவா?
முதல் முறை மழை பார்த்த சிறு பிள்ளை போலே
மனம் இன்று கொண்டாடுதே
இது என்ன இருதயம் மிருதங்கம் போலே
இன்று புது பண் பாடுதே

Popular Posts