Showing posts with label Arthana Binu. Show all posts
Showing posts with label Arthana Binu. Show all posts

Monday, May 21, 2018

Sema - Sandalee

ப‌டம் : செம‌ (2018)
இசை : G.V.பிரகாஷ்
பாடியவர்கள் : வேல்முருகன், மகாலிங்கம்
பாடல்வரிகள் : யுகபாரதி

Image result for sema tamil movie



சண்டாளி ஒன் அசத்துற‌ அழகுல லேசாகி
யேன் அந்திப்பகல் அத்தனையும் லூசாகி
பய கெடக்குறேன் தரையில பீசாகி
சண்டாளி ஒன் சிரிப்புல பற‌க்குறேன் தூசாகி
நா செவத்துல விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி

கையும் காலும் உன்ன‌ கண்டு ஒடவில்லடி
ரா வந்தும்கூட கண்ணுரெண்டும் மூடவில்லடி
பாவி புள்ள என்ன நீயும் ஆடவிட்டடி
தாய் பாசத்தோட நெஞ்சவந்து மோதிபுட்டடி
தெரியலடி... புரியலடி...
உன் இருவிழி மனுஷன இடுப்புல தூக்குதடி

சண்டாளி ஒன் அசத்துற‌ அழகுல லேசாகி
யேன் அந்திப்பகல் அத்தனையும் லூசாகி
பய கெடக்குறேன் தரையில பீசாகி


முன்னால நீ வந்தா இவன் முக்காமொழம் பூவாகுறேன்
சொல்லாம நீ போனா இவன் பல்லாங்குழி காயாகுறேன்
அப்புரானி உன்னப் பாத்து 
அம்மிவெச்ச தேங்காசில்லா நசுக்கிப்புட்டேன்
மொத்தமா நீ என்ன சேர
நித்தம் நெனப்புகுள்ள கசங்கிப்புட்டேன்

சொட்டவால‌ குட்டி நானும் சோறு திங்கல
நீ தொட்டுப் பேச ரெண்டு நாளா வீடு தங்கல
முத்திமோதும் உன் நெனப்பு ரீலு சுத்தல
நீ எட்டிப்போக‌ செத்து போவேன் காது குத்தல
கதவிடல... கலங்கிடல...
நா உன்ன விட ஒருத்திய இதுவர பாத்திட‌ல

சண்டாளி ஒன் அசத்துற‌ அழகுல லேசாகி
யேன் அந்திப்பகல் அத்தனையும் லூசாகி
பய கெடக்குறேன் தரையில பீசாகி
சண்டாளி ஒன் சிரிப்புல பற‌க்குறேன் தூசாகி
நா செவத்துல விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி


கட்டாந்தர ஒன்னாலதான் கம்மாக்கர நீராகுறேன்
செந்தாமர‌ கண்ணாலநான் பொங்காமலே சோறாகுறேன்
நொங்குபோல என்ன சீவும் 
கண்ணுக்குள்ள கட்டிபோட்டு அட‌ச்சுப்புட்ட
உச்சிவானா நின்ன ஆள‌
ஒரே ஒதட்டசைப்பில் உலுக்கிபுட்ட‌

அல்லிராணி என்ன ஏன்டி ஆட்டி வைக்கிற
ஒன் அன்பில் என்ன சாவிக்கொத்தா மாட்டி வைக்கிற
புள்ளிமான செக்கு மாடா மாத்தி வைக்கிற
நீ வெள்ளிகாசா என்ன ஏனோ சேத்து வைக்கிற
பழம்விடுற... பழக்கிடுற...
யேன் பகலையும் இரவையும் படையலு போட்டுடுற

சண்டாளி ஒன் அசத்துற‌ அழகுல லேசாகி
யேன் அந்திப்பகல் அத்தனையும் லூசாகி
பய கெடக்குறேன் தரையில பீசாகி
சண்டாளி ஒன் சிரிப்புல பற‌க்குறேன் தூசாகி
நா செவத்துல விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி

Popular Posts