Sunday, March 15, 2020

Uzhavan - Maari Mazhai Peiyadho

படம் : உழவன் (1993)
இசை : A.R..ரஹ்மான்
பாடியவர் : சாகுல் ஹமீது, G.V.பிரகாஷ், சுஜாதா
பாடல் வரிகள் : வாலி


Image result for Uzhavan



கமலத்தண்ணி இறக்கு மச்சான்
ஏரப்பூட்டி உழுது வச்சான்
வித்துநெல்ல எடுத்து வச்சான்
விதைக்க நாளு காத்திருந்தான்
மாரி மழை பெய்யாதோ...
மக்க பஞ்சம் தீராதோ...

மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் 
வானம் கருக்கலையே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் 
சோலைதான் இங்கில்லையே

மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற


சட்டியில மாக்கரச்சு சந்தியில கோலமிட்டு
கோலம் அழியும் வரை கோடமழை பெய்யாதோ
வானத்து ராசாவே மழை திருப்பும் புண்ணியரே
சன்னல் ஒழுவாதோ சார மழை பெய்யாதோ

வடக்கே மழை பெய்ய 
வரும் கிழக்கே வெள்ளம்
கொளத்தாங் கரையிலே அயிரை துள்ளும்
கிழக்கே மழை பெய்ய 
கிணறெல்லாம் புது வெள்ளம்
பச்சை வயக்காடு நெஞ்சை கிள்ளும்
நல்ல நெல்லு கதிரறுத்து புள்ள 
நெளி நெளியா கட்டு கட்டி
அவ கட்டு கட்டி போகையிலே
நின்னு கண்ணடிப்பான் அத்தை மகன்
உழவன் சிரிக்கணும் உலகம் செழிக்கனும்
மின்னல் இங்கு பட படக்க

மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும்
வானம் கருக்கலையே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும்
சோலைதான் இங்கில்லையே
மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற


வரப்புல பொண்ணிருக்கு 
பொண்ணு கையில் கிளி இருக்கு
கிளி இருக்கும் கைய நீ எப்போ புடிப்ப

வெதை எல்லாம் செடியாகி 
செடியெல்லாம் காயாகி
காய வித்து உன் கையா புடிப்பேன்
புது தண்டட்டி போட்ட புள்ள 
சும்மா தலதலன்னு வளந்த புள்ள
ராத்தவலையெல்லாம் குலவை இட 
நான் தாமரை உன் மடி மேல

கனவுகள் பலிக்கணும் 
கழனியும் செழிக்கனும் வானம் கரு கருக்க

மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் 
வானம் கருக்கலையே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் 
சோலைதான் இங்கில்லையே
மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற

மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற

Popular Posts