Monday, January 21, 2019

Panchalankurichi - Un Uthattora

படம் : பாஞ்சாலங்குறிச்சி  (1996)
இசை : தேவா
பாடியவர்கள் : ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்
பாடல்வரிகள் : வைரமுத்து


Image result for panchalankurichi tamil movie



தன நானா நானே நா நா 
தன நானா நானே த‌னனானே நா நா

உன் உதட்டோர சிவப்பே அந்த மருதாணி 
கடனா கேட்கும் கடனா கேட்கும்
நீ சிரிச்சாலே சில நேரம் அந்த நிலவு வந்து 
உளவு பார்க்கும் உளவு பார்க்கும்
என் செவ்வாழை தண்டே...
என் செவ்வாழை தண்டே சிறு காட்டுவண்டே 
உன்ன நெனச்சு தான் எச பாட்டு 
கொஞ்சம் நெருங்கிவா இத கேட்டு

ஆஆஆ... ஆஆஆ...
ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ...
ஆஆஆ... ஆஆஆ...


ஏன் மம்முதா அம்புக்கு ஏன்
இன்னும் தாமசம் ஆஆஆ...

அடியே அம்மணி வில்லு இல்ல 
இப்போ கைவசம் ஆஆஆ...

ஏன் மல்லு வேட்டி மாமா 
மனசிருந்தா மார்க்கம் இருக்குது

என்னை பொசுக்குன்னு கவுக்க
பொம்பளைக்கு நோக்கம் இருக்குது



முருகமலை காட்டுக்குள்ள 
விறகு எடுக்கும் வேளையில
தூரத்துல நின்னவரே
தூக்கி விட்டால் ஆகாதா

பட்ட விறக தூக்கிவிட்டா 
கட்ட விரலு பட்டுபுட்டா 
விறகில்லாம தீ புடிக்கும் 
வெட்கம் கெட்டு போகாதா

நீ தொடுவத தொட்டுக்க
சொந்தத்துல வரைமுறை இருக்கா

நீ பொம்பள தானே 
உனக்கு அது நியாபகம் இருக்கா

உன் நெனப்பு தான் 
நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது ஆஆஆ....

அட உன் கிறுக்குல
எனக்கு இந்த பூமி சுத்துது



சிங்கம் புலி கரடி கண்டா 
சேர்த்தடிக்க கை துடிக்கும் 
பொட்டு கன்னி உன்ன கண்டா 
புலி கூட தொட நடுங்கும்

உம்ம நெனச்சு பூசையில 
வேப்பெண்ணையும் நெய் மணக்கும் 
நீ குளிச்ச ஓடையில 
நான் குளிச்சா பூ மணக்கும்

ஏய் வெட்கம் கெட்ட பெண்ணே 
என்னை ஏன் தூக்கி சுமக்குற

என் மனசுக்குள் புகுந்து 
ஏன் மச்சான் இறங்க மறுக்குற

அடி என் நெஞ்சிலே
ஏன்டியம்மா வத்தி வைக்குற

உன் ஆசைய எதுக்கு 
இன்னும் பொத்தி வைக்குற 

Popular Posts