Sunday, May 13, 2018

Viyabari - Aasai Patta

ப‌டம்: வியாபாரி (2007)
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், வைஷாலி
பாடல்வரிகள்: வாலி

Image result for viyabari mp3



ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும்...
அம்மாவ வாங்க முடியுமா

ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும்...
அம்மாவ வாங்க முடியுமா

ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்தே நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா...

ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்தே நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா...

உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா

உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும்...
அம்மாவ வாங்க முடியுமா


பட்டினியா கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளைமுகம் பார்த்து பசி மறப்பா
இளவட்டம் ஆன‌ பின்னும் எண்ணை தேச்சி குளிக்க வைப்பா
உச்சி முதல் பாதம் வரை உச்சி கொட்டி மகிழ்ந்திருப்பா
நெஞ்சிலே நடக்க வைப்பா நிலாவ பிடிக்க வைப்பா
பிஞ்சி விரல் நகம் கடிப்பா பிள்ளை எச்சில் சோறு தின்பா
பல்லு முளைக்க நில்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீறி விடுவா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா..

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும்...
அம்மாவ வாங்க முடியுமா


மண்ணில் ஒரு செடி முளைச்சா மண்ணுக்கு அது பிரசவம்தான்
உன்னை பெற துடிதுடிச்சா அன்னைக்கு அது பூகம்பம்தான்
சூரியனை சுத்திக்கிட்டு தன்னை சுற்றும் பூமியம்மா
பெத்தெடுத்த பிள்ளைய‌ சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா
கர்ப்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா
பேதை போல் அவள் இருப்பா மேதையாய் உன்னை வளர்ப்பா
என்ன வேண்டும் இனி உனக்கு அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
என்ன வேண்டும் இனி உனக்கு அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு

Popular Posts