Tuesday, March 5, 2013

பூவரசன் - இந்த பூவுக்கொரு

படம்: பூவரசன் (1996)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள்: வாலி








இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புண்ணை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புண்ணை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே


மெல்ல மெல்ல பூத்து வரும் உன் முகத்தை பார்த்து வரும்
நெஞ்சுக்குள்ள நட்டு வெச்ச நாத்துதான்
உள்ளபடி சொல்ல போனா உன்னிரண்டு கண்ணு பட்டு
உள்ளுக்குள்ளே பொங்குதொரு ஊத்துதான்

பொங்குகுற ஒடை ஒன்னு பக்கத்துல நிக்கயில
நீச்சலிட ஓடி வரும் காத்துதான்
சித்திரமே நீயும் ஒரு உத்தரவு தந்து விடு
அள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்து தான்

காதோரம் ஆசை ஆசையாய் கதை பேசும் காலம் தான் இது
ஏதேதோ பேசி பேசியே என்னை நீங்கி கூச்சம் போனது

ஒரு வாரம் ஒரு மாதம் உறங்காமல் ஒரு மோகம்
தனியாய் இருந்தால் தணலாய் எறியும் போதும் ஏகாந்தம்

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புண்ணை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே

நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்

அடி புண்ணை வன குயிலே

இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்

அடி தென் பழனி மயிலே


***********************
This part is in MP3 only
***********************

எப்படியும் ஆவணிக்குள் செப்பு சிலை தாவணிக்குள்
தொட்டில் கட்டி பிள்ளை போல ஆடுவேன்
என்னுடைய எண்ணப்படி கை கொடுக்கும் அம்மனுக்கு
சொன்னப்படி தேர் இழுத்து பாடுவேன்

வைகை நதி கை இணைக்க தென் மதுரை இங்கிருக்க
வங்க கடல் பக்கம் அது போகுமா
நட்ட நடு ஜாமத்திலும் பட்ட பகல் வேளையிலும்
நின்றிருப்பேன் உன்னுடைய தாகமா

மான் பூவே மாலை வேளையில் மடி சேரு தாகம் தீர்க்கிறேன்
தாம்பூலம் மாற்றி ஆகட்டும் உனை நானே கையில் சேர்க்கிறேன்

உனை நானும் அடையாது பசி தாகம் கிடையாது
இளைத்தேன் இளைத்தேன் இனியும் இளைத்தால் தேகம் தாங்காது

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அட புண்ணை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே

நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்

அட புண்ணை வன குயிலே

இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்

அடி தென் பழனி மயிலே


Popular Posts