Sunday, November 18, 2012

Nallavanuku Nallavan - Unnaithane

படம்: நல்லவனுக்கு நல்லவன் (1984)
இசை: இளையராஜா
பாடியவர்கள்:  K.J.ஜேசுதாஸ், மஞ்சுளா
பாடல்வரிகள்: வைரமுத்து

Image result for Nallavanukku Nallavan




உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்
உன்னைத்தானே....


மலரின் கதவொன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா?
கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா?

என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு
என்னைத்தானே...


உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்தது

என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு
என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே


Popular Posts