Wednesday, November 14, 2012

Chinna Gounder - Muthumani Malai


படம்: சின்னக் கவுண்டர் (1992)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா
பாடல் வரிகள்: R.V.உதயகுமார்







முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட
உள்ளத்துல நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப்பூ தானே
புது சந்தனமும் நீ தானே
முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட


கொலுசுதான் மெளனமாகுமா
மனசுதான் பேசுமா

மேகந்தான் நிலவை மூடுமா
மவுசுதான் கொறயுமா

நேசப்பட்டு வந்த பாசக்குடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே

வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே

தாழம்பூவுல வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா

முத்து மணி மாலை

என்ன தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட


காலிலே போட்ட மிஞ்சிதான்
காதுல பேசுதே

கழுத்துல போட்ட தாலிதான்
காவியம் பாடுதே

நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்
பொட்டு வச்சதாரு நாந்தானே

அத்திமரப் பூவும் அச்சப்படுமா?
பக்கத்துணை யாரு நீதானே

ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற

முத்து மணி மாலை
என்ன தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட
உள்ளத்துல நீதானே
உத்தமரும் நீதானே
இது நந்தவனப்பூ தானே
புது சந்தனமும் நீ தானே

ஒரு நந்தவனப்பூ தானே
புது சந்தனமும் நீ தானே

Popular Posts