படம்: ஒன்பது ரூபாய் நோட்டு (2007)
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: ஸ்ரீனிவாஸ்
பாடல்வரிகல்: வைரமுத்து
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்
உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும்
பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும்
வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்
சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும்
மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்
என்னோட சொத்தெல்லாம் தொலச்சுப்புட்டேன்
இப்போ என்பேரில் உலகத்தையே எழுதிக்கிட்டேன்
துறவிக்கு வீடுமனை ஏதும் இல்ல
ஒரு குருவிக்கு காசேதான் தேவை இல்ல
சில்லென காத்து சித்தோட ஊத்து
பசிச்சா கஞ்சி படுத்தா உறக்கம்
போதுமடா போதுமடா போதுமடா சாமி
நான் சொன்னாக்கா வலமிடமா சுத்துமடா பூமி
மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்
காசு பணம் சந்தோசம் தருவதில்ல
வைரகல்லுக்கு அரிசியோட ருசியும் இல்ல
போதுமின்னு மனசு போல செல்வமில்ல
தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வமில்ல
வேப்பமர நிழலு வீசிலடிக்கும் குயிலு
மாட்டு மணி சத்தம் வயசான முத்தம்
போதுமடா போதுமடா போதுமடா சாமி
அட என்னப்போல சுகமான ஆளூ இருந்தா காமி
மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்
உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும்
பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும்
வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்
சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும்
ம்... ம்ம்ம்ம்...