Tuesday, May 15, 2012

பாடும் பறவைகள் - கீரவானி...



படம்: பாடும் பறவைகள் (1985)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல் வரி: வைரமுத்து






Download this MP3
(Right Click & Save Link As)



ச... நி ச ரி ச நி....
ஆ... ஹா... ஆ...
ச... நி ச ம க ம ரி
ஆ... ஆ... ஆ...
ப த ச... நி ச ரி ச நி
ஆ... ஹா... ஆ...
ச.... நி ச ம க ம ரி
ஆ... ஆ... ஆ...
ப த ச ச ச நி ரி ரி ரி ச க க க ரி ம ம ம க ப
ச நி த ப ம க ரி ச நி


கீரவானி... இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே...
அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வா நீ
கீரவானி... இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே...


க ரி ச ப ம க... ப நி...
ச ரி க ரி க ச.... நி ப...
நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி பூப்பூத்தது பூங்கொடி


தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்
வருவாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்
கீரவானி... இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே...
அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வா நீ
கீரவானி... இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே...


புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டைதான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன் பூந்தென்றலாய் மாறினேன்


இந்த வனமெங்கிலும் ஒரு சுரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன்
மலரில் மலராய் மலர்ந்தேன்
பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்
கீரவானி... இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே...


அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வா நீ
கீரவானி... இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே...

Popular Posts