படம் : தேவா (1995)
இசை : தேவா
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ஒரு கடிதம் எழுதினேன் அதில் என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னை காதலி ப்ளீஸ்
ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன்
காதலி ஆ... ஹா... ஹா... ஹா...
என்னை காதலி யே... ஹே... ஹே... ஹே...
காதலி ஆ... என்னை காதலி ஆ... ஹா... ஹா... ஹா... ஹா...
ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்
கண்ணே உன் காலடி மண்ணை திருநீறு போலே
நான் அள்ளி பூசிடுவேனே என் நெஞ்சின் மேலே
அன்பே என் ஆலயம் என்று உன் வாசல் தேடி
அன்றாடம் நான் வருவேனே தேவாரம் பாடி
ஆறுகால பூஜை செய்யும் ஏழை கொண்ட ஆசை
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ
காதலி... காதலி
என்னை காதலி... என்னை காதலி
காதலி ஆ... என்னை காதலி ஆ...
ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்
நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று
நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு
ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி
அலை பாய்ந்து நான் இங்கு வாழ அவை தானே சாட்சி
நீயில்லாத நானே குளிர் நீரில்லாத மீனே
நீர் ஓடை போல கூட வேண்டுமே
காதலி மை டார்லிங் என்னை காதலி ப்ளீஸ்
காதலி என்னை காதலி
ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன்