படம் : ஊமை விழிகள் (1986)
இசை : மனோஜ் க்யன்
பாடியவர் : S.N. சுரேந்தர், சசிரேகா
பாடல் வரி: ஆபாவணன்
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம் விரைவில் அரங்கேறிடும்
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
கூந்தலில் பூச்சூடினேன்... கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது... ஒ... ஒ...
கூடவந்த நாணம் தடுக்குது
கூந்தலில் பூச்சூடினேன்... கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது... ஒ... ஒ...
கூடவந்த நாணம் தடுக்குது
கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
சித்திர பூவிழி பாரம்மா... சிற்றிடை மெலிந்ததெனம்மா
பத்து விரல் அணைக்கத் தானம்மா... ஒ... ஒ...
முத்து ரதம் எனக்குத் தானம்மா...
சித்திர பூவிழி பாரம்மா... சிற்றிடை மெலிந்ததெனம்மா
பத்து விரல் அணைக்கத் தானம்மா... ஒ... ஒ...
முத்து ரதம் எனக்குத் தானம்மா...
உனக்காக உயிர் வாழ இந்த பிறவி எடுத்தது
உயிரோடு உயிரான இந்த உறவு நிலைத்தது
மாமரத்து பூ எடுத்து மங்கை என்னை தேடி வா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி ஓடி வா
கண்ணா புது நாடகம் விரைவில் அரங்கேறட்டும்... ம்
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடலாம்...
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடலாம்...