Monday, August 1, 2011

பாண்டித்துரை - என்ன மறந்த

படம் : பாண்டித்துரை (1992)
இசை : இளையராஜா

பாடியவர் :  K.S.சித்ரா, 
மனோ
பாடல் வரி : கங்கை அமரன்







என்ன மறந்த பொழுதும்...
நான் உன்ன மறக்கவில்லையே...


என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே...
கண்ணு உறங்கும் பொழுதும்
உன் எண்ணம் உறங்கவில்லையே...
என் ராஜாதி ராஜனிருந்தா
நான் வேறேதும் கேக்கவில்லையே...
என் மாமா என் பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவையில்லையே...


என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே...


ம்மேல ஆச வச்சு உள்ளுக்குள்ள பாசம் வச்சு
ஆளான அன்னக்கிளி நான்...
பூமால கோத்து வச்சு போட ஒரு வேள வச்சு
போடாம காத்திருக்கேன் நான்...
வேண்டாத சாமி இல்ல வேற வழி தோணவில்ல
ஏங்காம ஏங்கி நின்னேன் நான்...
போடாத வேலி ஒண்ணு போட்டு வச்ச நேரம் ஒண்ணு
பாடாத சோகம் ஒண்ணு பாடிவரும் பொண்ணு ஒண்ணு
என் ராகம் கேக்கவில்லையா
மாமா இன்று ஏதாச்சும் வார்த்தை சொல்லய்யா...


என்ன மறந்த பொழுதும் 
நான் உன்ன மறக்கவில்லையே...


பொன்னான கூண்டுக்குள்ள பூட்டி வச்ச பச்சக்கிளி
கண்ணீர விட்டுக் கலங்கும்...
கண்ணான மாமன் எண்ணம் காட்டாறுப் போல வந்து
எப்போதும் தொட்டு இழுக்கும்...
உன்ன எண்ணி நித்தம் நித்தம் ஓடுதய்யா பாட்டுச்சத்தம்
பொண்ணோட நெஞ்சம் மயங்கும்...
ஓத்தயில பூங்கொலுசு தத்தளிச்சுத் தாளம் தட்ட
மெத்தையில செண்பகப் பூ பாடுக்குள்ள சோகம் தட்ட
பாடாம பாடும் குயில் நான்
மாமா உன்ன கூடாம வாடும் மயில் நான்...


என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே...
என் ராசாத்தி பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவையில்லையே...


என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே...

Popular Posts