Thursday, April 7, 2011

பீமா - முதல் மழை



படம் : பீமா (2008)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : 
ஹரிஹரன், பிரசன்னா, மஹதி
பாடல் வரி : யுகபாரதி






முதல் மழை எனை நனைத்ததே
முதன் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ம்ம்ம்... முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் இதமாய் மிதந்ததே


கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்
என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம் என்று உணர்ந்தேன்

எதுவும் புரியாப் புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்
கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன்

முதல் மழை எனை நனைத்ததே
முதன் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே


ஒர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை
ஒ... ஒர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்


பெயரே தெரியாத பறவை அழைத்ததே

இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

Popular Posts