படம் : நேபாளி (2011)
இசை : ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர் : க்ரேஸ், சத்யன், ஸ்வேதா
பாடல் வரி : யுகபாரதி
கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என்வசமே எனும் சங்கதியாய்
எட்டு திசைகளும் அதிருமே
சிறு புன்னகையில் எனை வென்றுவிடும்
அவள் தென்றலே
இரு கண்களையும் எழில் செய்துவிடும்
அவள் மின்னலே
காலை மாலை ஆகுமே
காதல் கொள்ள வேணுமே
தினம் பேசி போகிற ஜாடைகள்
பல நூறு கவி சொல்லுதே
பகலே பகலே இரவாய் தோன்றிடு
இரவே இரவே பகலை நீங்கிடு
மூச்சுக் குழலிலே மோகம் விரியுதே
கூச்சம் தொலையவே தேகம் சரியுதே
கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
உடை தொட்ட இடம் விரல் தொட்டு விட
உயிர் கெஞ்சுமே
அடைபட்ட நதி உடைபட்டுவிட
அலை பொங்குமே
வாசம் வீசும் பூவிலே
நானும் உந்தன் வாசனை
மிதமான சூரிய தீபமாய்
இமை நான்கு மொழி சிந்துதே
எது நீ எது நான் இனிமேல் தேடுவோம்
நதி நீ கரை நான் கலந்தே ஒடுவோம்
பூக்கள் முழுவதும் தீண்டும் வெறியிலே
கூட்டம் நடத்துமே தோற்கும் அழகிலே
கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என்வசமே எனும் சங்கதியாய்
எட்டு திசைகளும் அதிருமே