Wednesday, April 13, 2011

Roja - Puthu Vellai Mazhai

படம் : ரோஜா (1992)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  சுஜாதா, உன்னிமேனன்

பாடல் வரி : வைரமுத்து
Image result for roja movie




புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது


நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது


பெண் இல்லாத ஊரிலே 
அடி ஆண் பூக்கேட்பதில்லை


பெண் இல்லாத ஊரிலே 
கொடிதான் பூப்பூப்பதில்லை


உன் புடவை முந்தானை 
சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது


இது கம்பன் பாடாத சிந்தனை 
உந்தன் காதோடு யார் சொன்னது?


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது


இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது


இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது


மனம் சூடான இடம் தேடி அலைகின்றது


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது


இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது




நீ அணைக்கின்ற வேளையில் 
உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்


நீ வெடுக்கென்று ஒடினால் 
உயிர்ப் பூ சருகாக உலரும்


இரு கைகள் தீண்டாத பெண்மையை 
உன் கண்கள் பந்தாடுதோ?


மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா 
எந்தன் மார்போடு வந்தாடுதோ?



புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது


நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!


புது வெள்ளை மழை 


இங்கு பொழிகின்றது


இந்தக் கொள்ளை 


நிலா உடல் நனைகின்றது


புது வெள்ளை மழை


இங்கு பொழிகின்றது


இந்தக் கொள்ளை நிலா


உடல் நனைகின்றது

Popular Posts