Monday, October 29, 2012

ராஜகுமாரன் - என்னவென்று



படம் : ராஜகுமாரன் (1994)
இசை : இளையராஜா
பாடியவர் :  S.P. பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : R.V.உதயகுமார்





என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படி சொல்வேனோ
அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் பாராத தேன் நிலா

என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படி சொல்வேனோ

தெம்மாங்கு பாடிடும் சின்ன விழி மீன்களும்
பொன் ஊஞ்சல் ஆடிடும் கன்னி கருங்கூந்தலும்
முத்தாடும் மேடை பார்த்து வாடி போகும் வான் பிறை
முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை
வண்ண பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க தாங்காமல் நாணுவாள்
புது பூ கோலம் தான் காலில் போடுவாள்

என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படி சொல்வேனோ
அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் பாராத தேன் நிலா

ஆ.... கண்ணோரம் ஆயிரம் காதல் கணை வீசுவாள்
முந்தானை சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாய மேகமாகி ஆசை தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடி பாடி ஒடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படி சொல்வேனோ
அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் பாராத தேன் நிலா

என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ

அதை எப்படி சொல்வேனோ

Popular Posts