Wednesday, January 5, 2011

கன்னத்தில் முத்தமிட்டால் - விடை கொடு



படம் : கன்னத்தில் முத்தமிட்டால் (2002)
இசை : A.R. ரஹ்மான்

பாடியவர் :  M.S.விஸ்வநாதன், பல்ராம், மாணிக்க வினாயகம்,
பாடல் வரி : வைரமுத்து










விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்


விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா? வருமா?
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?

கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?

பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

Popular Posts